நடிகர் சங்க கட்டிடத்திற்கு நடிகை நிக்கி கல்ராணி நிதிஉதவி...

 
Published : Apr 30, 2017, 06:08 PM ISTUpdated : Sep 19, 2018, 03:13 AM IST
நடிகர் சங்க கட்டிடத்திற்கு நடிகை நிக்கி கல்ராணி நிதிஉதவி...

சுருக்கம்

nikigalrani donate 3 lacks for nadigarsangam

தென்னிந்திய நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 

கட்டிடம் கட்டுவதற்கான அரசு அனுமதிகளும் கிடைத்த நிலையில் கட்டிட நிதிகளையும் நடிகர் நடிகைகள் தாமாகவே முன்வந்து நன்கொடை அளித்து  வருகின்றனர். 

நடிகர் சங்க வளாகத்தில், திருமண மண்டபத்தை கட்டுவதற்கான செலவை  நடிகர் சங்க அறங்காவலர் ஐசரி கணேஷ் மற்றும் பிரிவியூ தியேட்டர்  கட்டும்  செலவை சிவகுமார்,சூர்யா,கார்த்தி குடும்பத்தாரும்  ஏற்றுகொண்டுள்ளனர் .

பழம் பெரும் நடிகை வாணிஸ்ரீ - ரூபாய் 1,55,555/ , ராதா- ரூபாய் 1,00,000/, ஜனனி- ரூபாய் 40,000/,சத்யபிரியா- ரூபாய் 25,000,ஜெயசித்ரா ரூபாய் 10,000/,நடிகர் சங்கம் பி.ஆர். ஒ. ஜான்சன் - ரூபாய் 60,000/= நன்கொடை அளித்துள்ளனர் . இதனை தொடர்ந்து நடிகை நிக்கி கல்ராணி 3 லட்சம் ரூபாய் கட்டிட நிதிக்காக நன்கொடை வழங்கி உள்ளார் .

இதற்கான காசோலையை அவர்நடிகர் சங்கம் அலுவலகத்தில் நேரில் சென்று சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ஸ்ரீமன் அவர்களிடம் வழங்கினார். 

ஏற்கனவே நடிகர் சங்கம் பொது செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் தலா 5 கோடி ரூபாய் நன்கொடை அளிப்பதாக அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!