
சின்னத்திரை தொகுப்பாளினிகளில் மிகவும் பிரபலமானவர் 'திவ்யதர்ஷினி 'என்கிற 'டிடி' இவரின் கலகலப்பான சிரிப்பிற்கும் , பேச்சுக்கும் பல ரசிகர்கள் உண்டு.
அதே போல இவர் பல பிரபலங்களின் செல்ல பிள்ளை என்று கூட சொல்லலாம்.
கடந்த சில வருடங்களாக பிரபல தனியார் தொலைக்காட்சியில் "காபி வித் டிடி" என்கிற நிகழ்ச்சியில் பல பிரபலங்களுடன் உரையாடும் நிகழ்ச்சியை நடத்தி வந்தார், இதனை தொடர்ந்து தற்போது அந்த நிகழ்ச்சியில் சில மாற்றங்கள் செய்து "அன்புடன் டிடி" என்று நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இதே போலவே ஒரு நிகழ்ச்சியை பிரபல தொலைக்காட்சியில் நடத்த உள்ளார் பிரபல நடிகையும், இயக்குனர் மணிரத்னத்தின் மனைவியுமான சுஹாசினி.
'வீக் எண்டு வித் ஸ்டார்ஸ்' என்று புதிதாக ஆரமித்துள்ள இந்த நிகழ்ச்சியில், நடிகர் நடிகைகளின் அனுபவங்கள் பற்றி கேட்டு தெரிந்து கொள்ள வரும் சுஹாசினி.
இந்த நிகழ்ச்சி குறித்து கூறுகையில், தனக்கு பல நடிகர்கள், நடிகைகளை பற்றி தெரியும் ஆனால் அவர்களின் சொந்த வாழ்க்கையை பற்றி இது வரை தெரியாது, இந்த நிகழ்ச்சியின் மூலம் நான் தெறித்து கொள்ள இருப்பதாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.