
'விஸ்வாசம்' படத்திற்கு பின், சூர்யா நடித்துள்ள 'NGK ' படத்திற்கு தான் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருவதாக ஆஸ்திரேலியாவில் உள்ள சவுத் ஸ்டார் இன்டர்நேஷனல் திரையரங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சவுத் ஸ்டார் இன்டர்நேஷனல் திரையரங்கம் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றையும் போட்டுள்ளது. அதில் பொங்கல் ரிலீசாக வெளியான 'விஸ்வாசம்' திரைப்படதிற்கு 5 மாதத்திற்கு முன்னதாகவே ரசிகர்கள் முன்பதிவு செய்ய துவங்கினர்.
அதேபோல் தற்போது... தற்போது சூர்யா நடித்துள்ள 'NGK' திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு நிலவி வருவதாக தெரிவித்துள்ளது.
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள 'NGK' திரைப்பட, மே 31 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி மற்றும் ராகுல் பிரீத் சிங் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். விரைவில் வெளியாக உள்ள இந்த படத்திற்கு தான் மாஸ் எதிர்பார்ப்பு நிலவி வருவதாக திரையரங்கம் தெரிவித்துள்ளது, சூர்யா ரசிகர்களை குஷியாக்கி உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.