
கமலை விட்றதா இல்லை..! மன்னார்குடி ஜுயர் அதிரடி..!
இந்துக்களை பற்றி தொடர்ந்து அவதூறாக பேசி வரும் நடிகர் கமலஹாசனை விட மாட்டோம் என மன்னார்குடி ஸ்ரீ செண்டலங்கார செண்பக மன்னார் ஜுயர் தெரிவித்து உள்ளார்
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து என கமல் தெரிவித்தது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கமலின் இந்த பேச்சுக்கு மக்கள் மத்தியில் பெரும் கண்டனம் எழுந்து வருகிறது. அவர் மீது போலீசில் புகார் கொடுத்து முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மன்னார்குடி ஜுயர், "தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்" தற்போது இந்து அறநிலையத் துறை மற்றும் தமிழக அரசு மீது அதிக நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அன்றைய தினத்தில் காந்தியை நாதுராம் கோட்சே சுட்டது அவருடைய தேசபக்தியை உணர வைக்கின்றது. இருந்தபோதிலும் காந்தியை கோட்சே சுட்டது தவறுதான்.
இந்நிலையில் நடிகர் கமல் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பிடம் இருந்து பணத்தை பெற்று இந்துக்களை பற்றி தொடர்ந்து அவதூறு பேசி வருகிறார். இவர் இவ்வாறு தொடர்ந்து பேசினால் தமிழகத்தில் நடமாட விட மாட்டோம். அவருடைய குடும்பமே கிறிஸ்தவ மதத்திற்கு மாறி உள்ளது. கமல் ஒரு நல்ல நடிகர். ஆனால் சினிமாவில் நடித்து காட்டுவதற்கு பதிலாக பொதுவெளியில் காட்டியுள்ளார். எங்களுடைய எதிர்ப்பு கமல்ஹாசனுக்கு மட்டுமல்ல... இந்துக்களை எதிர்க்கும் யாராக இருந்தாலும் அவருக்கு எதிராக திரும்புவோம்.
கமல்ஹாசன் கட்சிக்கு தடை விதிக்கக் கோரி அகில இந்திய துறவியர் பேரவை சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுக்க உள்ளோம் என தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.