
விஜய் டிவி தொலைக்காட்சியில், ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருக்கிறது. பிக்பாஸ் இரண்டாவது சீசன் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், விரைவில் துவங்க உள்ள சீசன் 3 மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே தமிழ் பிக்பாஸ் சீசன் 3 குறித்த அறிவிப்புகள் வெளியாகி வந்த நிலையில், நிகழ்ச்சி தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது.
தற்போது இதுகுறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி பிக்பாஸ் சீசன் 3, விரைவில் ஆரம்பமாக உள்ளதை உறுதியாகியுள்ளது. இதில் கமலஹாசன், கருப்பு நிற கண்ணாடி அணிந்து அதனை கழட்டுகிறார். பிக்பாஸ் 3 என்று விரைவில் அதில் கூறப்பட்டுள்ளது.
இதிலிருந்து அடுத்தடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். சமீபத்தில் பிக்பாஸ் ப்ரோமோ, பூந்தமல்லி அருகே உள்ள பிரபல தனியார் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது என வெளியான தகவலைத் தொடர்ந்து, தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இதில் கலந்துகொள்ள உள்ள பிரபலங்கள் பற்றி தெரிந்துகொள்ள ரசிகர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.