2022 MOVIES : வலிமை - RRR , பீஸ்ட் - KGF 2... அடுத்த வருடம் காத்திருக்கும் செம்ம ட்ரீட்..

By Kanmani PFirst Published Dec 31, 2021, 9:46 PM IST
Highlights

2022 MOVIES : வலிமை படத்துடன் ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர் மற்றும் ஏப்ரல் மாதம் வெளியாகும் பீஸ்ட்  உடன் KGF 2 மோதவுள்ளதால் இந்த வருட துவக்கமே அமோகமாக இருக்கும் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அஜித் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், 'வலிமை' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வரும் ஜனவரி 13-ம் தேதி வெளியாக உள்ளது. இன்னும் படம் வெளியாக சில தினங்களே உள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைக்கும் விதத்தில், அவ்வப்போது படக்குழு லேட்டஸ்ட் அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. 

அதேபோல அஜித் படத்திற்கு போட்டியாக  rrr  ஜனவரி 7-ம் தேதி வெளியாக உள்ளது. பாகுபலி இரண்டு பாகங்களின் மாஸ் வெற்றிக்கு பிறகு ரசிகர்களுக்கு அடுத்த மாஸ் விருந்தா இயக்குனர் ராஜமௌலி rrr படத்தை பிரமாண்ட செலவில் உருவாக்கி வருகிறார். ராம் சரண் (Ram Charan), ஜூனியர் என்.டி.ஆர் ( Junior NTR), ஆலியா பட் (Alia Bhatt), சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான் டூடி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள  ஆர்.ஆர்.ஆர் (RRR) திரைப்படம் சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி  உருவாக்கப்பட்டு உள்ளது. 

இதற்கிடையே தமிழ் சினிமாவின் மற்றுமொறு மாஸ் ஹீரோவான விஜயின் பீஸ்ட் பிப்ரவரியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.நெல்சன் அடுத்ததாக விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி உள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், யோகிபாபு, ரெடின், ஷைன் டாம் சாக்கோ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். 

இந்நிலையில் பீஸ்ட் க்கு போட்டியாக  2 ஏப்ரல் 14-ல் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  Prashanth Neel இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியான K.G.F: Chapter 1 2018-ல் வெளியாகி செம ஹிட் அடித்தது. இதன் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் 3 வருடமாக எதிர் நோக்கி உள்ளனர். இந்த படத்தின் இரண்டாம் பாகமும் செம்ம வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆக இந்த வருட துவக்கமே தூள் கிளப்ப போகிறது. ஆனால் தெலுங்கு ஹிட் படங்களால் தமிழ் ஹிரோசின் படங்கள் வசூல் ரீதியில் பின் தங்க வாய்ப்பும் அதிகமாக உள்ளது. இவற்றில் எந்த படம் ரசிகர்களின் மனதை வென்று வசூலில் சாதனை படைக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம்....

click me!