"அடுத்த ஜனாதிபதி ரஜினிகாந்த்?" - டெல்லியில் பற்றி எரியும் பரபரப்பு..!!

 
Published : Apr 22, 2017, 03:35 PM ISTUpdated : Sep 19, 2018, 03:11 AM IST
"அடுத்த ஜனாதிபதி ரஜினிகாந்த்?" - டெல்லியில் பற்றி எரியும் பரபரப்பு..!!

சுருக்கம்

next president is rajinikanth

குடியரசுத் தலைவர் பதவிக்கு நடிகர் ரஜினிகாந்தின் பெயரும் பரிசீலிக்கப்படுவதாக  டெல்லி பாஜக வட்டாரத்தில்  தகவல்கள் றெக்கை கட்டிப் பறக்கின்றன.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் முடிகிறது. அந்த பதவிக்கு  நடைபெற உள்ள தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

குடியரசுத் தலைவர் பதவிக்கு  பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், அமிதாப்பச்சன் உள்ளிட்டோர் பெயர்கள் அடிபட்டன.

இதனிடையே, குடியரசுத் தலைவர் பதவிக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகாவத்தை நிறுத்தலாம் என்று பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிவசேனை அண்மையில் தெரிவித்திருந்தது.

ஆனால் மோகன் பகாவத் தனக்கு அப்படி ஒரு எண்ணமில்லை என கூறி இந்தப் போட்டியில் இருந்து விலகிக்கொண்டார். இதே போன்று அத்வானியும் தனக்கு வேண்டாம் என ஒதுங்கிக் கொண்டார்.

இந்நிலையில், திடீர் திருப்பமாக நடிகர் ரஜினிகாந்த் பெயரை பரிந்துரைக்க பாஜக மேலிடம் ஆலோசித்து வருவதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ரஜினிகாந்த்தை தேர்ந்தெடுப்பதன் மூலம்  தமிழகத்தில் வலுவாக காலுன்றலாம் என்றும், அவரின் ரசிகர்கள் மத்திய அரசினை ஆதரிப்பார்கள் என்றும் பாஜக நினைப்பதாகவும் பேசப்படுகிறது.

மேலும், ரஜினியை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தும் போது எதிர்க்கட்சிகள் எதிர்க்காது என்று பாஜக தலைவர்கள் நினைப்பதாக கூறப்படுகிறது,

இப்படி ஒரு வதந்தி டெல்லி வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக றெக்கை கட்டிப் பறக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து மீண்டும் ஒரு ஜனாதிபதி !!!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜனநாயகன் vs பராசக்தி : நன்றி மறந்தாரா சிவகார்த்திகேயன்..? சினிமாவிலும் விஜய்க்கு எதிராக நடக்கும் பாலிடிக்ஸ்
2026-ஆம் ஆண்டுக்கான மாஸ்டர் பிளான் ரெடி... விரைவில் குட் நியூஸ் சொல்ல தயாராகும் ரிஷப் ஷெட்டி