ரஜினி அங்கிள் நீங்க எங்க இருக்கிங்க? மீனா ஆண்ட்டி இங்கே இருக்காங்க!

Published : Dec 11, 2019, 06:04 PM IST
ரஜினி அங்கிள் நீங்க எங்க இருக்கிங்க? மீனா ஆண்ட்டி இங்கே இருக்காங்க!

சுருக்கம்

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில், ஒரு காலத்தில் அவரது ஹாட் ஜோடிகளாக இருந்த மீனா, குஷ்பு இருவரும் இணைந்துவிட்டனர். இந்த சர்ப்பரைஸ் பற்றி ‘பல ஆண்டுகளுக்குப் பின் ரஜினி உடன் நடிப்பது மகிழ்ச்சி. நல்ல கதை, நல்ல கேரக்டர். நான் வரும் இடமெல்லாம் கலகலப்பாக இருக்கும்.’ என்று இப்போதே தெறி கொழுத்தியிருக்கிறார் மீனா. 

*    தனுஷின் ஃபேவரைட் இயக்குநர்களில் ஒருவரான துரை செந்தில்குமார் இயக்கும் பட்டாஸ் படத்தின் படப்பிடிப்பு குற்றாலத்தில் நடந்திருக்கிறது. தனுஷ் தங்கியிருந்த கெஸ்ட் ஹவுஸிலிருந்து நடக்கும்  தூரத்தில்தான்  ஷூட்டிங் ஸ்பாட். அதற்கே ‘ஆடி கார் வந்தால்தான் வருவேன்’ என்று அடம் பிடித்துவிட்டாராம் தனுஷ். ஒரு நாளைக்கு இருபதாயிரம் என நாற்பது நாட்களுக்கு இதற்கே தனியாக செலவழித்ததாம் தயாரிப்பு தரப்பு. 
(அசுரத்தனமான அடமா இருக்குதுலே சிதம்பரம்)

*    லைக்காவின் உரிமையாளர் சுபாஷ்கரனின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கிட சீனியர் ஹாட் இயக்குநர் மணிரத்னம் மற்றும் ஜூனியர் ஹார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இருவருக்குள்ளும் செம்ம போட்டியாம். இருவருமே ‘இவர் கதையை படமாக்கிட விரும்புறேன்’ என்று ஒரே மேடையில் ஓப்பனாய் பேசியிருக்கிறார்கள். 
(ஏனுங்க மணி, அம்பானி கதையை ‘குரு’ படத்துல குருமா பண்ணுனது போதாதா?)

*    ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில், போனிகபூரின் கோடிக்கணக்கான பணத்தில், தல அஜித் நடிக்க இருக்கும் ‘வலிமை’ படத்துக்காக அசுரத்தனமான செட்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. அநேகமாக அஜித் - நயன் காம்போவில் பாடல் காட்சிகள்தான் முதலில் ஷுட்டாக இருக்கும் போல் தெரிகிறது. இந்த படத்தை கட்டாய ஹிட்டாக வேண்டும் என வெறித்தனத்துடன் இருக்கிறதாம் தல - விநோத் கூட்டணி.
(நேர்கொண்ட வெறித்தனம்)

*    சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில், ஒரு காலத்தில் அவரது ஹாட் ஜோடிகளாக இருந்த மீனா, குஷ்பு இருவரும் இணைந்துவிட்டனர். இந்த சர்ப்பரைஸ் பற்றி ‘பல ஆண்டுகளுக்குப் பின் ரஜினி உடன் நடிப்பது மகிழ்ச்சி. நல்ல கதை, நல்ல கேரக்டர். நான் வரும் இடமெல்லாம் கலகலப்பாக இருக்கும்.’ என்று இப்போதே தெறி கொழுத்தியிருக்கிறார் மீனா. 
(ரஜினி அங்கிள் நீங்க எங்கே இருக்கீங்க? மீனா ஆண்ட்டி இங்கே இருக்காங்க)

*    சீனியர் நடிப்பு ராட்சஸி சாவித்ரியின் வாழ்க்கையை படமாக்கிய ‘மகா நடி’ படத்தில், ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான்  நடித்திருந்தார். பேசப்பட்ட அந்த கேரக்டரிலேயே இப்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவாக கங்கணா ரணவத் நடிக்கும் ‘தலைவி’ படத்திலும் நடிக்க இருக்கிறார் துல்கர். 
(பேசாம ஜெமினிகணேசனின் பத்து  ஹிட் படத்தை ரீமேக் பண்ணுங்க துல்கர்)

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!