"கைலாசா போல 5 சிஷ்யைகள் உடன் தனிநாடு அமைக்க வேண்டும்"... நித்திக்கு டப் கொடுக்கும் விஜய் பட இயக்குநர்...!

Web Team   | Asianet News
Published : Dec 11, 2019, 06:00 PM IST
"கைலாசா போல 5 சிஷ்யைகள் உடன் தனிநாடு அமைக்க வேண்டும்"... நித்திக்கு டப் கொடுக்கும் விஜய் பட இயக்குநர்...!

சுருக்கம்

அதில் "கைலாசா போல ஒரு தனி நாடு அமைக்க வேண்டும் என்ற ஆசை தனக்கும் உள்ளதாக" இயக்குநர் பேரரசு கூறினார். 

மாசாணி, பரத்தின் ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி போன்ற படங்களை இயக்கியவர் எல்.ஜி.ரவிசந்தர். இவர் தற்போது நான் அவளை சந்தித்த போது என்ற படத்தை இயக்கியுள்ளார். அதில்  கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சாந்தினி நடித்துள்ளார். சினிமா பிளாட்பார்ம் என்ற நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வரும் 27ம் தேதி திரைக்கு வர உள்ளது. அதற்கு முன்னதாக அப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் படக்குழுவினருடன் இயக்குநர் கே.பாக்யராஜ், பேரரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

அதில் "கைலாசா போல ஒரு தனி நாடு அமைக்க வேண்டும் என்ற ஆசை தனக்கும் உள்ளதாக" இயக்குநர் பேரரசு கூறினார். கூடவே தனக்கு 5 சிஷ்யைகள் தேவை என்றும் பேசினார். இப்போது சோசியல் மீடியாவில் டாப் ட்ரெண்டில் இருப்பது சாமியார் நித்தியானந்தாவும், அவரது தனித்தீவு கைலாசாவும் என்பதால் அதை குறிக்கும் விதமாக இயக்குநர் பேரரசு நகைச்சுவையாக பேசினார். 

ஈக்வடார் நாட்டில் தனித்தீவு வாங்கியுள்ள நித்தி, அங்கு தனி நாடு அமைக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது. நித்தியானந்தாவை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வரும் நிலையில், தினமும் புதுப்புது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாவதோடு, ட்ரெண்டிங்கிலும் இடம் பிடித்து வருகிறது. எனவே கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளார் நித்தியானந்தா. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிரஜனுக்கு சம்பளத்தை கிள்ளி கொடுக்காமல் அள்ளிக் கொடுத்த பிக் பாஸ்... அடேங்கப்பா இத்தனை லட்சமா?
ஓவர் பில்டப்போடு வந்து புஸ்ஸுனு முடிந்த புதுச்சேரி மாநாடு..! விஜய் பேசியது என்ன? தளபதியின் முழு ஸ்பீச் இதோ