சங்கத்தை இரண்டா உடைச்சும் திருந்தலயே... தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட புது அணி ரெடி...!

By Kanimozhi PannerselvamFirst Published Sep 5, 2020, 3:41 PM IST
Highlights

ஏற்கனவே விஷால் அணியோடு சேர்ந்து நடைபெற உள்ள தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் 4 அணிகள் போட்டியிட உள்ளதாக தெரிகிறது.

திரைப்பட தயாரிப்பாளார்கள் சங்கத்திற்கு வருகிற ஜூன் 21ம் தேதி தேர்தலை நடத்துவது என தனி அலுவலர் மற்றும் தேர்தல் அதிகாரி அறிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள்  தொடங்கப்பட்டன. எனினும் தற்போது நிலவி வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்ட ஜூன் 30 என்ற காலக்கெடுவை நீக்க கோரி தயாரிப்பாளர் சங்கம் சார்பில், உயர்நீதி மன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடித்திருக்க வேண்டும், அதுதொடர்பான அறிக்கையையும் அக்டோபர் 30ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்தது. இதனிடையே ஏற்கனவே இருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கம் சரியாக செயல்படவில்லை எனக்கூறி இயக்குநர் பாரதிராஜா தனியாக ஒரு சங்கத்தை ஆரம்பித்தார். 'தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம்'  என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட அந்த சங்கத்தில் 40க்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. 

ஏற்கனவே விஷால் அணியோடு சேர்ந்து நடைபெற உள்ள தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் 4 அணிகள் போட்டியிட உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் புதிய அணி ஒன்று தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிட உள்ளதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தயாரிப்பாளர் எஸ்.விஜயசேகரன் தலைமையில் இணைந்துள்ள அணியின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. 

 

இதையும் படிங்க: “மக்கள் திலகத்தின் மறு உருவமே”... மீண்டும் எம்.ஜி.ஆர். கெட்டப்பில் விஜய்... சர்ச்சையை கிளப்பிய போஸ்டர்...!

இதில் பங்கேற்ற நிர்வாகிகள் ஏற்கனவே 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்களின் செயல்பாடு திருப்தி அளிக்காததால், அவர்கள் மீண்டும் பதவிக்கு வருவதை தடுப்பதற்காக நாங்கள் போட்டியிட உள்ளோம் என அறிவித்துள்ளனர். 
 

click me!