இயக்குனர் ஷங்கருக்கு அடி மேல் அடி... 'அந்நியன்' பட தயாரிப்பாளரால் வந்த புது பிரச்சனை!

By manimegalai aFirst Published Apr 15, 2021, 1:55 PM IST
Highlights

இயக்குனர் ஷங்கர், 'அந்நியன்' படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளது குறித்து நேற்றைய தினம், அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், 'அந்நியன்' படத்தின் கதையை சுஜாதாவிடம் இருந்து பணம் கொடுத்து தான் வாங்கி வைத்திருப்பதாகவும், தன்னுடைய அனுமதி இல்லாமல் இந்த கதையை ஷங்கர் 'ரீமேக்' செய்ய உள்ளதாக கூறி ஆஸ்கர் ரவிச்சந்திரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
 

இயக்குனர் ஷங்கர், 'அந்நியன்' படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளது குறித்து நேற்றைய தினம், அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், 'அந்நியன்' படத்தின் கதையை சுஜாதாவிடம் இருந்து பணம் கொடுத்து தான் வாங்கி வைத்திருப்பதாகவும், தன்னுடைய அனுமதி இல்லாமல் இந்த கதையை ஷங்கர் 'ரீமேக்' செய்ய உள்ளதாக கூறி ஆஸ்கர் ரவிச்சந்திரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மேலும் செய்திகள்: தடுப்பூசி போட்டுக்கொண்டால் கொரோனா வந்தாலும் இறப்பு ஏற்படாது..! நடிகர் விவேக் பேட்டி..!
 

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனராக அறியப்பட்டவர் இயக்குனர் ஷங்கர். கடந்த 2005  ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ஆஸ்கர் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் தயாரிப்பில், சுமார் 260 கோடி பட்ஜெட்டில் உருவான திரைப்படம், 'அந்நியன்'. நடிகர் விக்ரம் கதாநாயகனாக நடித்து, மிரட்டியிருப்பர். இவருக்கு ஜோடியாக சதா நடித்திருந்தார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், விவேக், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த படத்திற்கு, சுஜாதா கதை மற்றும் வசனம் எழுதி இருந்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்த இந்த படத்திற்கு, விஜயன் படத்தொகுப்பு செய்திருந்தார். இந்நிலையில், இந்த படத்தை 'ஹிந்தியில்' தன்னுடைய உரிய அனுமதி இன்றி ரீமேக் செய்வதாக, தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் இயக்குனர் ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மேலும் செய்திகள்: நடிகர் தூக்கிட்டு தற்கொலையா? பகீர் உண்மையை போட்டுடைத்த குடும்பத்தினர்!
 

சுஜாதா எழுதிய கதையின், உரிமையை பணம் கொடுத்து தான் வாங்கி வைத்திருப்பதாக வி.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். ரன்வீர் சிங் நடிப்பில், நேற்று தான் 'அந்நியன்' படம் குறித்து அதிகார பூர்வமாக ஷங்கர் வெளியிட்டுள்ள நிலையில், தற்போது இந்த படத்திற்கு புதிய சிக்கல் வந்துள்ளது. 

மேலும் செய்திகள்: கவர்ச்சி உடையில் அந்தரத்தில் தலைகீழாக தொங்கி அதிரவைத்த சமந்தா..! வாயடைத்து போன ரசிகர்கள்!
 

அதே போல், இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு நிறுவனங்களின் படங்களை இயக்குவதற்கு இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டுமென லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. படத்திற்கு 150 கோடி ரூபாய் பட்ஜெட் போடப்பட்டிருந்த நிலையில், அதை தாண்டி 236 கோடி ரூபாய் வரை செலவு செய்து இருப்பதாகவும், ஆனாலும் 80 சதவீத பணிகள் மட்டுமே முடிந்து இருப்பதாகும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, இயக்குனர் சங்கரின் விளக்கத்தை கேட்காமல் எந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று கூறி, பிற படங்களை இயக்க கூடாது என ஷங்கருக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்திருந்தார். அதே சமயம் மனு மீது இன்று ஷங்கர் விளக்கமளிக்கவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் பிறப்படங்களை எடுக்க தடை விதிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. தனி நீதிபதி தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நிலையில் இந்தியன் -2 பட தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. தொடர்ந்து, அடி மேல் அடி வாங்கிவரும் இயக்குனர் ஷங்கர் என்ன முடிவு செய்வார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


 

click me!