தடுப்பூசி போட்டுக்கொண்டால் கொரோனா வந்தாலும் இறப்பு ஏற்படாது..! நடிகர் விவேக் பேட்டி ..!

By manimegalai aFirst Published Apr 15, 2021, 12:05 PM IST
Highlights

இந்நிலையில் மக்கள் மத்தியில் உள்ள கொரோனா தடுப்பூசியின் அச்சத்தை போக்கும் விதமாக, நடிகர் விவேக் சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில், தடுப்பூசி போட்டு கொண்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் தொற்று பாதிப்பு 8000ஐ நெருங்கி உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக நேற்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கடந்த 24 மணிநேரத்தில் 7,819 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,54,948 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 27ல் அதிகபட்சமாக 6,993 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், இரண்டாம் அலையில் மிக விரைவிலேயே 8 ஆயிரத்தை எட்டித் தொட்டிருந்தது பரபாப்பை ஏற்படுத்தியது.

மேலும் 45 வயதை கடந்தவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்பதை எடுத்து கூறும் விதமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். எனினும் பலர், தடுப்பூசி போட்டு கொள்ள அச்சப்படுகின்றனர். நேற்று தமிழகத்தில் துவங்கப்பட்ட தடுப்பூசி திருவிழாவில் 75 ,௦௦௦ பேர் மட்டுமே முன்வந்து தடுப்பூசி போட்டு கொண்டனர்.

இந்நிலையில் மக்கள் மத்தியில் உள்ள கொரோனா தடுப்பூசியின் அச்சத்தை போக்கும் விதமாக, நடிகர் விவேக் சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில், தடுப்பூசி போட்டு கொண்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், தமிழக அரசு கொரோனாவின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே கண்டிப்பாக அனைவரும், தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துத்தார்.

மேலும் தடுப்பூசி ஒன்றுதான் மக்கள் உயிரை பாதுகாக்கும் என்றும்  தடுப்பு ஊசி போட்டுக் கொள்வதே சிறந்த தடுப்பு நடவடிக்கை என்றும்,  தடுப்பூசி கொண்டால், கொரோனா வந்தாலும், எவ்வித இரவுபகல் ஏற்படாது என தெரிவித்தார். மேலும் முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியை பின்பற்றுவதும் மிகவும் முக்கியம் என தெரிவித்தார்.

click me!