ஹெல்மெட் அணிந்து கொண்டு பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தவர் யார்? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

Published : Sep 13, 2018, 12:09 PM ISTUpdated : Sep 19, 2018, 09:24 AM IST
ஹெல்மெட் அணிந்து கொண்டு பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தவர் யார்? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

சுருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி நாட்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், நிகழ்ச்சியின் மீது  ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் விதமாக தற்போது, பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர்கள் கெஸ்டாக நுழைந்துள்ளனர்.  

இதனால் முதல் சீசனுக்கு இருந்த ரசிகர்களின் பார்வை இவர்கள் மீது பட்டுள்ளது. இதனால் மீண்டும் பல ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க துவங்கியுள்ளனர். 

இந்நிலையில் ஏற்கனவே, பிக்பாஸ் வீட்டிற்குள் கவிஞர் சிநேகன், நடன இயக்குனர் காயத்திரி, நடிகை சுஜா வருணி, ஆர்த்தி, மற்றும் நடிகர் வையாபுரி ஆகியோர்  வந்துள்ள நிலையில், தற்போது ராயல் என்பீல்டு வண்டியில், ஹெல்மெட் அணிந்தவாறு புதிதாக ஒரு பிரபலம் என்ட்டர் ஆகி இருக்கிறார்.

அவர் வேறு யாரும் இல்ல, முதல் சீசனில் டைட்டில் வின்னர் என அறிவிக்கப்பட்ட ஆரவ் தான். இவர் உள்ளே வந்ததும், பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருந்தவர்கள் எல்லோரும் வெளியே வந்து அவரை உபசரிக்கிறார்கள். சிநேகன் கட்டி அனைத்து அவரை வரவேற்கிறார். 

பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றதும்,  மேக்கப் இல்லாத யாஷிகாவை பார்த்து "இன்னும் மேக்கப் கிட் கொடுக்கலையா?.. பிக்பாஸ் பாவம் இவங்க.. மேக்கப் கொடுத்துடுங்க" என ரெகமெண்ட் செய்துள்ளார். ஆரவ் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவார் என யாரும் எதிர்ப்பார்க்காத நிலையில் இவர் திடீர் என புதிதாக என்ட்டர் ஆகியுள்ளது பிக்பாஸ் ரசிகர்களை ஆச்சர்யப்பட வைதுள்ளது.
 
PREV
click me!

Recommended Stories

Siragadikka aasai: ரோகிணியின் ஆட்டம் முடிவுக்கு வருகிறதா? மீனாவை மிரட்டும் வில்லி - இன்றைய எபிசோட் அலப்பறை!
S2 E692 Pandiyan Stores 2: "கொலை செய்யக்கூட தயங்கமாட்டேன்!" - தங்கமயில் குடும்பத்தை எச்சரித்த கோமதி!