'ஓடிடியில் படங்கள் ரிலீஸ் நல்லதல்ல': அமைச்சர் கடம்பூர் ராஜு..!

By manimegalai aFirst Published Feb 10, 2021, 6:52 PM IST
Highlights

100 சதவீத திரையரங்குகள் இப்போது தமிழகத்தில் திறக்கப்படும் என்கிற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ள நிலையில், தொடர்ந்து படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி வருவது நல்லது அல்ல என அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்த போது, தெரிவித்துள்ளார்.
 

100 சதவீத திரையரங்குகள் இப்போது தமிழகத்தில் திறக்கப்படும் என்கிற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ள நிலையில், தொடர்ந்து படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி வருவது நல்லது அல்ல என அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்த போது, தெரிவித்துள்ளார்.

கொரோனா பிரச்சனையால்  திரைத்துறை கடுமையான பாதிப்புகளை சந்தித்தது. திறக்கபடாத தியேட்டர்கள்,  பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படப்பிடிப்பு என பல பிரச்சனைகள் சுழட்டி அடித்தது. கடன் வாங்கி படம் எடுத்த தயாரிப்பாளர்கள் பலரும் கொஞ்சமாவது சம்பளத்தை குறைத்துக்கொள்ளுங்கள் என டாப் ஹீரோ, ஹீரோயினுக்கு கோரிக்கை வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். 

மறுபுறமே தியேட்டர் உரிமையாளர்களின் நிலை மிகவும் மோசமான நிலைக்கு சென்றது. அதாவது தியேட்டர்களை நம்பி பிழைத்து வரும் 10 லட்சம் குடும்பங்களை எப்படியாவது காப்பாற்றுங்கள் என முதலமைச்சரிடம் கதறும் நிலைக்கு தள்ளப்பட்டனர். 

கடந்த மார்ச் மாதம் முதல் சுமார் 7 மாதத்திற்கு மேலாக தியேட்டர்கள் திறக்கப்படாமல் இருந்ததால், பொன்மகள் வந்தாள், பெண் குயின், சூரரை போற்று, மூக்குத்தி அம்மன், போன்ற முன்னணி நடிகர் நடிகைகள் படங்கள், ஓடிடி தளத்தில் வெளியானது. முதலில் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில், இந்த மாதம் முதல் 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

மக்களும் கொரோனா அச்சத்தில் இருந்து மீண்டு, மெல்ல மெல்ல திரையரங்குகளுக்கு செல்ல துவங்கியுள்ளனர். இருப்பினும் சில படங்கள் தொடர்ந்து ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதுகுறித்து கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு கூறுகையில், 'திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாவது நல்லது அல்ல என்றும், திரையரங்கில் வெளியான பின்... ஓடிடி தளத்தில் வெளியிடப்படலாம் என கூறியுள்ளார்.

click me!