இனி ஜூலையில் தான் புதுப்பட ரிலீஸ்... ஜூன் 30 வரை தியேட்டர்கள் திறக்கப்படாது?

By manimegalai aFirst Published Apr 10, 2020, 4:26 PM IST
Highlights

கொரோனா அச்சம் காரணமாக, ஊரடங்கு உத்தரவு போடுவதற்கு முன்பே, இந்தியாவில் உள்ள அணைத்து  திரையரங்கங்கள் மற்றும்  மக்கள் அதிகம் ஒன்று கூடும் மல்டிபிளக்ஸ் காம்ப்ளெக்ஸ் போன்றவை இழுத்து மூடப்பட்டது. 
 

கொரோனா அச்சம்:

கொரோனா அச்சம் காரணமாக, ஊரடங்கு உத்தரவு போடுவதற்கு முன்பே, இந்தியாவில் உள்ள அணைத்து  திரையரங்கங்கள் மற்றும்  மக்கள் அதிகம் ஒன்று கூடும் மல்டிபிளக்ஸ் காம்ப்ளெக்ஸ் போன்றவை இழுத்து மூடப்பட்டது. 

ஊரடங்கு உத்தரவு:

கொரோனா தொற்று மெல்ல மெல்ல இந்தியா  உள்ளே வர துவங்கியதுமே, மத்திய மற்றும் மாநில அரசுகள்... மக்கள் அதிகம் பாதிக்கப்படாத வண்ணம், ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. 

அதிகரிக்கும் கொரோனா:

எனினும், தற்போது தமிழகத்தில் மட்டும் இதுவரை 834 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் பலரது உடல் நிலை சீராக உள்ளதாகவும், விரைவில் குணமடைவார்கள் என சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

நீடிக்கும் ஊரடங்கு:

ஏப்ரல் 14 ஆம் தேதி வரை போடப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவை தற்போது தளர்த்த வேண்டாம் என்பது குறித்த பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், எனவே ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஜூலை தான் புதுப்படம்:

இந்நிலையில் தற்போது வெளியே கசிந்துள்ள தகவலின் படி, திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளர்கள். மே 31 ஆம் தேதிக்கு பின் திரையரங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ் போன்றவற்றில் பழைய படி வேலையை துவங்கலாம் என நினைத்தார்களாம்.

அனால் ஓரளவு கொரோனா அச்சம் அப்போதைக்கு குறைந்தாலும், மக்கள் அதிகம் ஒன்று கூடும் இடங்களால் ஆபத்து வர கூடும் என்பதற்காக, ஜூன் 30 ஆம் தேதி வரை அணைத்து திரையரங்கங்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் போன்றவை மூடியே இருக்க வேண்டும் என அரசு தரப்பில் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

திரைத்துறையை சுழட்டி அடிக்கும் கொரோனா:

ஏற்கனவே கொரோனாவால் போடப்பட்ட ஊரடங்கு காரணமாக திரைத்துறையை சார்ந்த பலர் வேலை இன்றி, கஷ்டப்பட்டு வரும் நிலையில், ஊரடங்கு முடிந்தாலும் ரிலீசுக்கு தயாராகி உள்ள படங்கள் ஒட்டுமொத்தமாக ஜூலை மாதத்திற்கு மேல் வெளியானால் அது பட தயாரிப்பாளர்களை பெரிதும் பாதிக்கும் என்றே கூறப்படுகிறது.

click me!