உண்மையிலேயே பெரிய மனசு! 25 கோடியை அடுத்து மேலும் 3 கோடி கொடுத்து உதவிய அக்ஷய் குமார்!

By manimegalai aFirst Published Apr 10, 2020, 3:23 PM IST
Highlights

கொரோனா தடுப்பு நிதியாக, ஏற்கனவே பாரத பிரதமர் மோடியின் நிதிக்கு ரூ.25 கோடியை பிரபல நடிகர் அக்ஷய் குமார் கொடுத்துள்ள நிலையில், தற்போது மீண்டும் கொரோனா தடுப்பு பணி மேற்கொண்டு வரும் அமைப்பிற்கு 3 கோடி கொடுத்து உதவியுள்ளார்.
 

கொரோனா தடுப்பு நிதியாக, ஏற்கனவே பாரத பிரதமர் மோடியின் நிதிக்கு ரூ.25 கோடியை பிரபல நடிகர் அக்ஷய் குமார் கொடுத்துள்ள நிலையில், தற்போது மீண்டும் கொரோனா தடுப்பு பணி மேற்கொண்டு வரும் அமைப்பிற்கு 3 கோடி கொடுத்து உதவியுள்ளார்.

மும்பை மாநகராட்சிக்கு உட்பட்ட  (பிஎம்சி)க்கு தான் இந்த தொகையை வழங்கி உள்ளார்.  இந்த பணம் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், முகமூடிகள் மற்றும் விரைவான சோதனை கருவிகளை உற்பத்தி செய்ய உதவும் நோக்கில் நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனாவின் முன்னால் நின்று போராடும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் புகைப்படம் ஒன்றையும் நேற்று வெளியிட்டு, தன்னுடைய நன்றிகளை தெரிவித்துள்ளார்.

இதில்  "பெயர்: அக்‌ஷய் குமார் நகரம்: மும்பை என்றும்  போலீசார்,  மருத்துவர்கள், செவிலியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், அரசாங்க அதிகாரிகள், விற்பனையாளர்கள், கட்டிட காவலர்கள் என அனைவருக்கும் அக்ஷய் குமார் தன்னுடைய உயிர் என அவர்களை கூறி நன்றிகளை கூறியுள்ளார்.

இவரின் பெரிய மனதை பாராட்டி தன்னுடைய நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள்.
 

Name : Akshay Kumar
City : Mumbai

Mere aur mere parivaar ki taraf se...
Police, Nagar Nigam ke workers, doctors, nurses, NGOs, volunteers, government officials, vendors, building ke guards ko 🙏🏻 pic.twitter.com/N8dnb4Na63

— Akshay Kumar (@akshaykumar)

click me!