
பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை நெருங்க நெருங்க, இந்த போட்டியின் களமும் சூடு பிடித்து வருகிறது. கடந்த வாரம், பிக்பாஸ் போட்டியில் இருந்து நடிகை கஸ்தூரி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் அடுத்த வார நாமினேஷன் பட்டியலில் நான்கு பேர் இடம்பெற்றுள்ளனர். ஆனால் எலிமினேஷன் இல்லை என்பது அவர்களுக்கு தெரியாது.
இது ஒரு புறம் இருக்க, கிராமத்து கலைகளை ஊக்குவிக்கும் விதமாக, இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் பொம்மலாட்டம் பற்றி சொல்லி கொடுப்பதற்காக புதிய நபர் ஒருவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்.
இவர் கற்று கொடுக்கும் பொம்மலாட்டத்தை, அவர் கற்றுத்தந்த இந்த கலையை ஒவ்வொருவரும் தினமும் மாலையில் அரங்கேற்றம் செய்ய வேண்டும் என்பது பிக்பாஸ் நிபந்தனையாக சொல்கிறது.
இதுகுறித்த, ஒரு வீடியோ தற்போது ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கொடுக்கப்பட்ட கிராமத்து டாஸ்கில், போட்டியாளர்கள் செமையாக மோதிக்கொண்ட நிலையில், இனி வரும் நாட்களிலும் இந்த டாஸ்கை ஒரு காரணமாக வைத்து, சொந்த விருப்பு வெறுப்புகளோடு மோதி கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.