'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் இணைந்த பிரபல நடிகை..! யார் தெரியுமா..?

Published : Nov 18, 2020, 07:19 PM IST
'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் இணைந்த பிரபல நடிகை..! யார் தெரியுமா..?

சுருக்கம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அணைத்து தொடர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக, அண்ணன், தம்பிகளின் பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாககும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் இல்லத்தரசிகளின் ஃபேவரட்.  கூட்டுக் குடும்பத்தின் ஒற்றுமையை இந்த சீரியலில் பார்க்கலாம்.   

இந்த சீரியலில் நடிகர் ஸ்டாலின், மூத்த அண்ணனாக நடிக்கிறார். அண்ணி வேடத்தில் சுஜிதா நடித்து வருகிறார். மேலும் வி.ஜே.சித்ரா, குமரன், ஹேமா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

வழக்கமாக மற்ற சீரியல்களில் இருப்பது போல, வில்லி, போலீஸ், கொலை, அழுகை என இல்லாமல் இருப்பது தான் இந்த சீரியலின் பலம் என்றே கூறலாம். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலை படி இந்த சீரியலில் புதிதாக ஒரு நடிகை இணைய உள்ளதாக கூறப்படுகிறது. 

ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான, ராஜா ராணி சீரியலில் நடித்து பிரபலமான வைஷாலி தான் தற்போது, பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடிக்க உள்ளார். ஆனால் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்கிற தகவல் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே ஒரு சில படங்களில் சிறிய சிறிய வேடங்களிலும் நடித்துள்ளார். 
 
PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லேட்டஸ்ட் ஹிட்ஸ்... ஓடிடியில் அடிபொலி ஹிட் அடித்த டாப் 5 மூவீஸ் இதோ
அடேங்கப்பா... டிசம்பர் 19-ந் தேதி ஓடிடியில் இத்தனை படங்கள் மற்றும் வெப் சீரிஸ் ரிலீஸ் ஆகுதா?