கொரோனாவுக்கு குட்-பை... மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்க போகும் மெகா ஸ்டார்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Nov 18, 2020, 06:09 PM IST
கொரோனாவுக்கு  குட்-பை... மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்க போகும் மெகா ஸ்டார்...!

சுருக்கம்

ஆச்சார்யா படத்தின் ஷூட்டிங் வேலைகளை ஆரம்பிக்கும் படி இயக்குநர் கொரட்டலா சிவாவிடமும் சொல்லிவிட்டாராம். 

கொரோனாவின் கோரதண்டவம் காரணமாக முடங்கி கிடந்த திரையுலகம் தற்போது தான் நிம்மதி பெருமூச்சு விட ஆரம்பித்தது. கடந்த மார்ச் மாதம் முதலே படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மே மாதம் முதல் சின்னத்திரை படப்பிடிப்பில் தொடங்கி தற்போது வெள்ளித்திரை வரை படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.ஆனால் படப்பிடிப்பில் பங்கேற்கும் நடிகர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கி வருகிறது. 


இந்நிலையில் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவிக்கு கடந்த 9ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்து வந்த “ஆச்சார்யா” படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் சிரஞ்சீவிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களையும் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தினார். 


ஆனால் சில நாட்களுக்குப் பிறகு சிரஞ்சீவி எடுத்த கொரோனா பரிசோதனையில் அவருக்கு ரிசல்ட் நெகட்டீவ் என வந்தது. அதுமட்டுமின்றி முதல் பரிசோதனையிலும் தனக்கு தவறாக பாசிட்டிவ் என வந்துவிட்டது என தெரிவித்தார். இதனால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு இருந்த சிரஞ்சீவி தற்போது படப்பிடிப்பிற்கு திரும்ப முடிவு செய்துள்ளாராம். 

 

இதையும் படிங்க: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவா இது?... சத்தமே இல்லாமல் நடத்தியுள்ள ஹாட் போட்டோ ஷூட்...!

ஆச்சார்யா படத்தின் ஷூட்டிங் வேலைகளை ஆரம்பிக்கும் படி இயக்குநர் கொரட்டலா சிவாவிடமும் சொல்லிவிட்டாராம். அதன்படி வரும் 20ம் தேதி முதல் ஆச்சார்யா படப்பிடிப்பு தொடங்க உள்ளது.இதில் ஹீரோயினாக காஜல் அகர்வாலும், சிறப்பு தோற்றத்தில் ரெஜினாவும் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் நடிக்க வரும் விஜய்.. படத்தை உறுதி செய்த திமுக கூட்டணி எம்.பி.. அசத்தல் அப்டேட்..!
Ethirneechal 2 E379 : அறிவுக்கரசியை நம்பி ரிஸ்க் எடுக்கும் ஆதி குணசேகரன்... ஜனனிக்கு நோ சொன்ன சக்தி