க்யூட்டா போஸ் கொடுங்குறேன்னு அசிங்கப்பட்ட பிரபல நடிகை... வடிவேலுடன் சேர்த்து வச்சு செய்யும் நெட்டிசன்கள்....!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Feb 25, 2020, 06:42 PM ISTUpdated : Feb 25, 2020, 06:44 PM IST
க்யூட்டா போஸ் கொடுங்குறேன்னு அசிங்கப்பட்ட பிரபல நடிகை... வடிவேலுடன் சேர்த்து வச்சு செய்யும் நெட்டிசன்கள்....!

சுருக்கம்

இதை பார்ப்பவர்களுக்கு ஒருவேலை வடிவேலு காமெடிகளை பார்த்து தான் ராஷ்மிகா இப்படி ஒரு போட்டோ ஷூட்டிற்கு பிளான் செய்தாரா...? என்று கூட என்னத் தோன்றும்.

கன்னட மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இரண்டு மொழிகளும் முன்னணி நடிகர்களின் முதல் சாய்ஸாக உள்ள ராஷ்மிகா, செம்ம பிசியாக படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் வெறும் இரண்டே படம் நல்லா ஓடியதும் தனது சம்பளத்தை லட்சத்தில் இருந்து கோடிக்கு மாற்றினார். இதை கேட்ட தயாரிப்பாளர்கள் தலைதெறிக்க தெருக்கோடிக்கு ஓடி வந்தது எல்லாம் தனி கதை.

பிற நடிகைகளை போலவே சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா, தன் பங்கிற்கும் விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்தி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அம்மணியின் க்யூட் ரியாக்‌ஷன் போட்டோ ஷூட் இன்ஸ்டாவில் ரொம்ப பிரபலம். 

அந்த வகையில் சமீபத்தில் மஞ்சள் நிற கவுனில் விதவிதமான ரியாக்‌ஷனில் டக்கராய் போஸ் கொடுத்தார் ராஷ்மிகா மந்தனா. அதை பார்த்த நெட்டிசன்களுக்கு என்ன தான் தோணியதோ தெரியவில்லை, வைகை புயல் வடிவேலுவின் ரியாக்‌ஷன்களுடன் ஒப்பிட்டு மீம்ஸ்களை தெறிக்கவிட்டுள்ளனர். 

ராஷ்மிகா மந்தனாவின் போட்டோக்கள் ஒரு பக்கம் வைரலாக நெட்டிசன்கள் உருவாக்கியிருக்கும் மீம்ஸ்களும் ஒரு பக்கம் வைரலாகி வருகிறது. ராஷ்மிகாவின் ஒவ்வொரு போஸுற்கு வடிவேலுவின் ரியாக்‌ஷனை தேடி பிடித்துள்ள நெட்டிசன்கள் மீம்ஸை நின்று நிதானமாக செதுக்கியுள்ளனர். 

இதை பார்ப்பவர்களுக்கு ஒருவேலை வடிவேலு காமெடிகளை பார்த்து தான் ராஷ்மிகா இப்படி ஒரு போட்டோ ஷூட்டிற்கு பிளான் செய்தாரா...? என்று கூட என்னத் தோன்றும். அந்த அளவிற்கு பக்காவாக பிளான் பண்ணி ராஷ்மியை வச்சி செய்துள்ளனர் நெட்டிசன்கள். எதையும் பிளான் பண்ணி செய்யனும்....! 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களுக்கு நடனமாட தடை... திடீர் நடவடிக்கைக்கு காரணம் என்ன?
சீண்டிய சிவி சண்முகம்... சைலண்டாக பதிலடி கொடுத்த நயன்தாரா - இன்ஸ்டா ஸ்டோரியை கவனிச்சீங்களா?