
விஜய் டிவி தொலைக்காட்சியில்... நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பல தொகுப்பாளர்கள் இருந்தாலும், ரசிகர்கர்களுக்கு முதலில் நினைவுக்கு வருபவர் டிடி தான். இவரின் கலகலப்பான சிரிப்பு, மற்றும் காமெடி நிறைந்த பேச்சு, ரசிகர்களை கட்டி இழுத்து டிவி முன் அமர வைத்துவிடும்.
சிறந்த தொகுப்பாளினிக்கான விருதையும் பல முறை பெற்றுள்ளார். டிடி ஒரு தொகுப்பாளினியாக தெரிந்தாலும் அவருக்கு மிகவும் பிடித்த வேலை என்றால் அது கல்லூரி பேராசிரியை வேலை தான்.
எத்திராஜ் கல்லூரியில் இவர் சில காலம் பேராசிரியராக பணியாற்றினார். மேலும் இவரிடம் பயின்ற மாணவர்கள் பலரும் இவருடன் தற்போது வரை நல்ல நட்பில் உள்ளனர்.
இப்படி பேராசிரியர் பணியை நேசித்து வேலை செய்த டிடியிடம் நெட்டிசன் ஒருவர், நீங்கள் எப்போது அம்மா ஆவீர்கள் என கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளித்த அவர், குழந்தை பெற்றால் மட்டும் அம்மா கிடையாது, அன்னை தெரேசா எவ்வளவு பேருக்கு அம்மா’ என்று கேட்டு சாட்டையடி பதில் கொடுத்து அவருடைய வாயை மூடியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.