கேரள பெண்களுக்கும் தமிழ்ப் பெண்களுக்கும் சண்டை மூட்டி விட்ட கோபிநாத்...!

 
Published : Oct 21, 2017, 03:20 PM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
கேரள பெண்களுக்கும் தமிழ்ப் பெண்களுக்கும் சண்டை மூட்டி விட்ட கோபிநாத்...!

சுருக்கம்

neeya naana gopitha kerala vs tamil girls program

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருக்கும் கோபிநாத்தும் அவர் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சியும் மிகவும் பிரபலம். ஏற்கெனவே இவர் வரதட்சணை பற்றி நடத்திய நிகழ்ச்சி மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

தற்போது இதே போல் சர்ச்சையை ஏற்படுத்தும் விதத்தில் ஒரு நிகழ்ச்சியை நடத்த உள்ளார். இது கேரள பெண்கள் vs தமிழ் பெண்கள் என்கிற பெயரில் ஒளிபரப்பாக உள்ளது.

இதில் கேரளப்பெண்கள் அழகா அல்லது தமிழ்ப் பெண்கள் அழகா என்பது போன்று சித்திரிக்கப் பட்டுள்ளது போல் தெரிகிறது. இதுகுறித்த முன்னோட்ட வீடியோ சமூகத் தளங்களில் பரவலானது. அதில், கேரளப் பெண்கள் தமிழ்ப் பெண்கள் தங்களுடைய கண், சிரிப்பு, முடி ஆகியவற்றைப் பார்த்து அழகாக இருப்பதாகக் கருதுகின்றனர் என்று தாக்கிப் பேசுகின்றனர்.

அதே போல் தமிழ்ப் பெண்கள் பல  வண்ணத்தில் இருக்கும் பாவாடை தாவணி தான் அழகு என்று கூற அதற்கு கேரளப் பெண்கள் அணியும் முண்டு, மற்றும் புடவைகளை ஏன் தமிழ்ப் பெண்கள் அணிய ஆசைப்படுகின்றனர் என கேள்வி எழுப்புகின்றனர்.

ஒருகட்டத்தில் இரண்டு அணியைச் சேர்த்த பெண்களும் நடனமாடியும் கூட, தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என மோதிக்கொள்ளும் அளவிற்கு இந்த நிகழ்ச்சியில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நானும், ரேவதியும் 6 மாசம் சேர்ந்து இருக்கணும்: கோர்ட் உத்தரவு! சாமுண்டீஸ்வரி, சந்திரகலாவுக்கு ஆப்பு வச்ச கார்த்திக்!
ஜெயிலர் 2-ல் நான் கெஸ்ட் ரோல் இல்லை: சிவண்ணாவின் மர்மப் பேச்சு! முத்துவேல் பாண்டியனுடன் மீண்டும் நரசிம்மா!