
நடிகை நயன்தாராவிற்கும், விக்னேஷ் சிவனுக்கும் கொரோனா அறிகுறி உள்ளதாகவும், இதனால் இவர்கள் இருவரையும்... எழும்பூரில் உள்ள அவர்களுடைய வீட்டில் தனிமை படுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகி கோலிவுட் திரையுலகையே பரபரப்பாக்கிய நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கியூட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர் இந்த காதல் ஜோடிகள்.
கோலிவுட்டில் திரையுலகில், அல்டிமேட் காதல் ஜோடிகளாக வலம் வந்துகொண்டிருப்பவர்கள், நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி. நானும் ரவுடி தான் படத்தின் மூலம் பற்றிய காதல் தீ இன்று வரை கொளுந்துவிட்டு எரிகிறது. ஏற்கனவே இரண்டு காதல் தோல்விகளை சந்தித்த நயன்தாராவிற்கு இந்த காதல் கண்டிப்பாக கை கூட வேண்டும் என்பதே இவர்களுடைய ரசிகர்களின் மிக பெரிய எதிர்பார்ப்பு.
படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன், ஜோடி வெளிநாட்டிற்கு சென்று காதல் பறவைகளாய் சிறகடித்து சுற்றி வருகிறார்கள். அங்கு போய் இருவரும் ஜாலியாகவும், ரொமான்டிசிக்காகவும் புகைப்படம் வெளியிட்டு, முரட்டு சிங்கிள்ஸை வெறுப்பேற்றுகின்றனர்.
நயன் எங்கு போனாலும் விக்னேஷ் சிவனுடன் தான் செல்கிறார். பதிலுக்கு விக்கியும் நயனை அதிகாரம் செய்யாமல் தங்கமே, வைரமே என்று கொஞ்சுகிறார். மேலும் திருமணம் செய்துகொள்ளாமல் இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு மூக்குத்தி அம்மன் படப்பிற்காக சென்ற இடத்தில் கோவில், கோவிலாக சென்று இருவரும் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.
இந்நிலையில் இருவரும் சேர்ந்து, ஊரடங்கு உத்தரவால் கிடைத்த ஓய்வு நாட்களை ஹாப்பியாக கழித்து வரும் நிலையில், நயன்தாராவுக்கும் - விக்னேஷ் சிவனுக்கும் கொரோனா தொற்று உள்ளதாக ஒரு செய்தி தீயாக பரவியது. இதை தொடர்ந்து, ஏற்கனவே இந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என்கிற தகவலை வெளியிட்ட நயன்தாராவின் தரப்பு. மேலும், தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் குழந்தைகளாக மாறி, கியூட் மியூசிக் ஒன்றிற்கு குட்டி ஆட்டம் போட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.