சிறுநீரக பிரச்சனையால் பழம்பெரும் நடிகை காலமானார்...!

By manimegalai aFirst Published Jun 21, 2020, 7:53 PM IST
Highlights

மூத்த நடிகை உஷா ராணி சிறுநீரக பிரச்சனை சம்மந்தமாக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்.
 

மூத்த நடிகை உஷா ராணி சிறுநீரக பிரச்சனை சம்மந்தமாக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்.

62 வயதாகும் உஷா ராணி, தமிழில் கிட்டத்தட்ட 50 படங்களிலும், மலையாளத்தில் 200 க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ளார். ஒரு சில இந்தி படங்களிலும் நடித்து பிரபலமானவர். குறிப்பாக தமிழில், 'அரங்கேற்றம்' படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடித்தார்.  மேலும் 'என்னை போல் ஒருவன்' மற்றும் எம்.ஜி.ஆரின் 'பட்டிக்காட்டு பொன்னையா' , சிவாஜி கணேசனுக்கு ஜோடியாகவும் சில படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவர் 2004 ஆம் ஆண்டு 'மயிலாட்டம்' என்கிற மலையாள படத்தில் நடித்தார்.

Latest Videos

1971 ஆம் ஆண்டில் உஷா ராணி தன்னை விட முப்பது வயது மூத்த இயக்குனர் சங்கரன் நாயரை மணந்து கொண்டார்.  இவருடைய கணவர் சங்கரன் நாயர் கடந்த 2006 ஆண்டு காலமானார்.

அதன் பின்னர், உஷா ராணி மகன் விஷ்ணு ஷங்கருடன் வசித்து வந்தார். கடந்த சில வருடங்களாகவே சிறுநீரக கோளாறு பிரச்சனையால் அவதி பட்டு வந்த இவருக்கு,  இன்று அதிகாலை உடல் நிலை மோசமானதை தொடர்ந்து, சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவருடைய மறைவிற்கு பிரபலங்கள் மற்றும் நடிகர் சங்கம் சார்பாக இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

senior member Passed away ☺️ Heartfelt Condolence. நமது சங்கத்தின் மூத்த உறுப்பினர் திருமதி. உஷாராணி காலமானார். ஆழ்ந்த இரங்கல்🙏 !! pic.twitter.com/UBqq1RYbfe

— NadigarSangam PrNews (@NadigarsangamP)

 

click me!