
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் - விக்னேஷ் சிவனும் காதலில் விழ காரணமாக அமைந்த திரைப்படம் “நானும் ரவுடி தான்”. அதன் நினைவாக விக்னேஷ் சிவன் (Vignesh shivan) தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு ரவுடி பிக்சர்ஸ் என பெயர் வைத்துள்ளார். இந்நிறுவனம் மூலம் நெற்றிக்கண், கூழாங்கல் என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தயாரித்து வருகின்றனர்.
அடுத்ததாக இந்நிறுவனம், தற்போது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்கிற படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி (vijay sethupathi) ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாராவும், சமந்தாவும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளார்.
இப்படத்தில் விஜய் சேதுபதி ரேம்போ என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேபோல் நயன்தாரா (Nayanthara), கண்மணி என்கிற கதாபாத்திரத்திலும், சமந்தா (Samantha) கத்திஜா என்கிற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அண்மையில் காத்துவாக்குல ரெண்டு காதல் (kaathuvaakula rendu kaadhal) படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் 6ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வரும் விக்னேஷ் சிவன்- நயன்தாரா அவ்வப்போது தங்களது கொண்டாட்ட வீடியோக்கள், போட்டோக்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்துவர் அந்த வகையில் தற்போது..காதலர் தினத்தை முன்னிட்டு நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரின் காதல் கொண்டாட்ட வீடியோ தான் இன்றைய ட்ரெண்டிங்கே..
மேலும் நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு பூங்கொத்து கொடுத்து ஆரத்தழுவி காதலர் தின வாழ்த்துகளை கூறியுள்ளார். இந்த வீடியோவும் இன்ஸ்டாகிராமில் வைரலாகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.