நயன்தாராவின் உடைந்து போன காதலை ஒட்டை வைக்கும் ரஜினி..? ஷூட்டுக்கு முன்னால கழுத்தில் தாலி..!

By Vishnu PriyaFirst Published Apr 22, 2019, 5:33 PM IST
Highlights

’என் ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன். கட்சி துவங்கியே தீருவேன். எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும், என் கட்சி போட்டியில் இருக்கும்.’ என்று தேர்தலுக்கு தன்னை கூர் தீட்டிக் கொண்டிருக்கிறார் ரஜினி.

’என் ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன். கட்சி துவங்கியே தீருவேன். எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும், என் கட்சி போட்டியில் இருக்கும்.’ என்று தேர்தலுக்கு தன்னை கூர் தீட்டிக் கொண்டிருக்கிறார் ரஜினி. ஆனால் அவரை சினிமாவிலிருந்து நகராத படி மீண்டும் மீண்டும் கால்சீட் கண்டெயினருக்குள் இழுத்துப் போடுவதிலேயே தயாரிப்பாளர்கள் குறியாக இருக்கின்றனர். 

அந்த லிஸ்டில் இப்போது நடிகை நயன் தாராவும் இணைந்திருக்கிறார் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆனால் அதுதான் உண்மை. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்  ரஜினி நடிக்கும் ‘தர்பார்’ படத்தில் அவரது ஜோடியாக நடிக்கிறார் நயன் தாரா. மும்பையில் ஷூட்டிங் மும்முரமாக போய்க் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நயனுக்கும், அவரது காதலர் விக்னேஷ் சிவனுக்கும் இடையில் உரசல் முளைத்து அது விரிசலாக வேரூன்றிவிட்டது. தப்பு தன் மீது இருந்தாலும் கூட இறங்கியே வராத நயன், இந்த முறை என்ன மாயமோ தெரியவில்லை தானே சமாதான கொடியை பறக்கவிட்டிருக்கிறார். ஆனாலும் சிவன் என்னமோ முறுக்கிக் கொண்டுதான் நிற்கிறார். 

பொதுவாக தன் லவ்வருக்கு ஆஸம் கிஃப்ட்களை கொடுத்து அசத்துவதுதான் நயனின் வழக்கம் (விக்கிக்கு மட்டுமல்ல இதுவரையில் இவர் லிஸ்டில் இருந்த எல்லோருமே இப்படி பயனடைந்தவர்கள்தான்) அந்த வகையில் இந்த சண்டையின் சமாதான பரிசாக மிகப்பெரிய கிஃப் ஒன்றை கொடுக்க முயன்றிருக்கிறார். அது ரஜினிகாந்தின் கால்ஷீட்தான்! யெஸ் தர்பார் ஷூட்டிங்கின் இடைவெளியில் ரஜினியிடம் இந்த விருப்பத்தை சொல்லி,  கிட்டத்தட்ட பத்து சதவீதம் பாசிடீவ் ரியாக்‌ஷனையும் சூப்பர் ஸ்டாரிடமிருந்து வாங்கிவிட்டாராம். 

பொதுவாக கதை கேட்ட பிறகே ஓ.கே. பண்ணும் ரஜினி, நயனுக்காக கால்ஷீட் ஓ.கே. பண்ணிவிட்டு ‘கதை கொடுக்க சொல்லும்மா’ என்றிருக்கிறாராம். இதை விக்கிக்கு செம்ம சர்ப்பரைஸாக சொல்லி அதிர வைத்த நயன், ‘சாருக்கு ஏற்ற மாதிரி மாஸா செம்ம ஸ்டோரியை ரெடி பண்ணு’ என்று கட்டளையிட, விக்கியும் ஸ்டோரி மேக்கிங்கில் பிஸி. 
இந்நிலையில், விக்கிக்கும் நயனுக்கும் இடையில் சமீபத்தில் சண்டை மூள காரணமே, விக்கியின் அம்மா ‘சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்க. சேர்ந்து வாழ்றதை பத்தி உறவுக்காரங்க பேசுறதை சகிக்க முடியலை’ என்று சொன்னதுதான். 

இதை விக்னேஷ் சிவன் அழுத்திச் சொல்ல போய்தான் ஜோடிக்கு நடுவில் விரிசல் விழுந்தது. ஆனாலும் இந்த விஷயத்தில் தன் மகன் தன் பக்கம் நின்றதில் விக்கியின் அம்மாவுக்கு ஹேப்பி. இந்நிலையில் இப்படி ரஜினியின் கால்சீட்டை கொடுத்து மகனை மீண்டும் நயன் மடக்கியதில் அதிர்ந்து போன விக்கியின் அம்மா, ‘யாரு கால்சீட் கொடுத்தாலும் சரி. ஷூட்டிங் போறதுக்கு முன்னாடி அவ கழுத்தில் நீ கட்டுற தாலி ஏறியே ஆகணும்.’ என்று சாமியாடுகிறாராம். தனது கனவிலும் நினையாத ரஜினியின் கால்சீட் கிட்டத்தட்ட கனிந்து வரும் நிலையில் இப்படியொரு வேட்டை தன் அம்மா வைப்பதில் விக்கி ஏகத்துக்கும் திகிலடித்து கிடக்கிறாராம்.

click me!