’நேர்கொண்ட பார்வை’ டீஸர் குறித்து நயன்தாரா என்ன கமெண்ட் அடிச்சிருக்கார் பாருங்க...

Published : Jun 13, 2019, 10:21 AM IST
’நேர்கொண்ட பார்வை’ டீஸர் குறித்து நயன்தாரா என்ன கமெண்ட் அடிச்சிருக்கார் பாருங்க...

சுருக்கம்

நேற்று மாலை 6 மணிக்கு வெளியான தல அஜீத்தின் ‘நேர்கொண்ட் பார்வை’ வெளியான 16 மணி நேரங்களுக்குள் சுமார் 52 லட்சம் பார்வையாளர்களைப் பெற்று சரித்திர சாதனை படைத்திருக்கிறது. அந்த ட்ரெயிலர் குறித்து இந்திப் பட உலகின் முக்கியப் புள்ளிகளெல்லாம் சர்ப்ரைஸ் கமெண்ட் அடித்துக்கொண்டிருக்கும் நிலையில் ‘விஸ்வாசம்’ நாயகி நயன்தாராவும் தன் பங்குக்கு ட்விட்டர் பக்கத்தில் கமெண்ட் அடித்துள்ளார்.

‘நேர்கொண்ட பார்வையின் முக்கிய அம்சமே அஜீத்தின் அடர்த்தியான நடிப்பு என்பதை அந்த டெரியிலர் பட்டவர்த்தனமாக காட்டியுள்ள நிலையில் நடிகை நயன் தாராவும் அதே தொனியில்தான் தனது ட்விட்டில் பகிர்ந்துள்ளார். அவரது பதிவில்,...’நேர்கொண்ட பார்வை’யின் ட்ரெயிலர் அடர்த்தியாக உள்ளது. தல எப்போதும் போலவே ப்ரில்லியண்ட் ஆக தோற்றமளிக்கிறார். இப்படத்திற்காக காத்திருக்கும் சூப்பர் ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு நல்ல விருந்து காத்திருக்கிறது’என்று பதிவீடிருக்கிறார்.

படப்பிடிப்பிகளிலிருந்து சில நாட்கள் ஓய்வு கிடைத்துருப்பதை ஒட்டி தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் ஃபிரான்ஸ் நாட்டிற்கு இன்பச் சுற்றுலா சென்றிருக்கும் நயன்தாரா தனது பிசியான காதல் டூயட்டுகளுக்கு மத்தியில் அஜீத் ரசிகர்களுக்காக கொஞ்ச நேரம் ஒதுக்கி ட்விட்டரில் கொஞ்சியிருப்பது தல ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியிருக்கிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

9-ல் 8 படங்கள் தோல்வி.. பான் இந்தியா ஸ்டார் தான் கடைசி நம்பிக்கை!
அபிராமிக்கு பதில் சாமுண்டீஸ்வரி செத்திருக்கலாம்! கதறி அழுத ரசிகர்கள் - சீரியல் குழுவை காரித் துப்பும் நெட்டிசன்கள்!