எடப்பாடியிடம் 7 கோடி ரூபாய் வாங்கிட்டு ஏமாற்றும் கருணாஸ் ! ராதாரவி திடுக் குற்றச்சாட்டு !!

By Selvanayagam PFirst Published Jun 13, 2019, 7:53 AM IST
Highlights

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் 7 கோடி ரூபாய் வாங்கிவிட்டு அரசியல் ரீதியாக அவரை நடிகர் கருணாஸ் ஏமாற்றிவிட்டதாக திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நடிகர் ராதாரவி திடுக்கிடும் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

நயன்தாரா நடித்த கொலையுதிர் காலம் என்ற திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவின்போது நயன்தாரா குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் ராதாரவி திமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் திமுகவில் இருந்து விலகி  முதலமைச்சர் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அப்போது ஒரு நடிகைக்காக என்னை திமுகவில் இருந்து விலக்கியது அக்கட்சிக்கு நல்லதல்ல என குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகர் ராதா ரவி, சென்ற நடிகர் சங்கத் தேர்தலில் மாற்றம் வேண்டும் என பாண்டவர் அணியினர் பிரச்சாரம் செய்து வெற்றி பெற்றனர். ஆனால் அவர்கள் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை என கூறினார்.

கடந்த தேர்தலில் நான் எனக்கு ஓட்டுப் போட்டால் சங்கத்துக்கு லாபம், பாண்டவர் அணிக்கு ஓட்டுப் போட்டால் எனக்கு லாபம் என்று கூறினேன். தற்போது எனக்குதான் லாபம். நான் அதிக படங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் நடித்ததேன் என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் 7 கோடி ரூபாய் வாங்கிவிட்டு அரசியல் ரீதியாக அவரை நடிகர் கருணாஸ் ஏமாற்றிவிட்டதாகவும் திடுக்கிடும் குற்றச்சாட்டை வைத்தார். இப்படி ஏமாற்றுப் பேர்வழியான இவர் எப்படி நடிகர் சங்கத்துக்கு நன்மை செய்யய முடியும் என கேள்வி எழுப்பினார்.

அதே நேரத்தில் பல சட்ட சிக்கல்கள் இருப்பதால் வரும் 23 ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடக்காது எனவும் அவர் தெரிவித்தார். எனக்கு எப்போது ஓட்டு அளிக்க உரிமை கிடைக்குதோ அப்போதுதான் தேர்தல் நடக்கும் என அதிரடியாக தெரிவித்தார்.

நலிவடைந்த நடிகர்களுக்கு உதவுவதாக கூறி நலிவடைந்த நடிகர்கள் நடிகர் விஷாலும்இ நாசரும் தான் தங்களை வளப்படுத்திக் கொண்டார்கள் என குற்றம்சாட்டினார். ஆனால் எனது நண்பர் சிவகுமாரின் மகன் கார்த்தி இதில் சிக்கியிருப்பது தான் தனக்கு  வருத்தம அளிப்பதாக ராதாரவி தெரிவித்தார்.

மொத்ததில் பாண்டவர் அணி 9 கோடி ரூபாய் திருடிவிட்டதாகவும் ராதா ரவி அடுக்கடுக்காக குற்றம்சாட்டினார்.

click me!