
நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள் என அனைவரது வாழ்க்கை வரலாறு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. அந்த வகையில், மேரி கோம், தோனி, சில்க் சுமிதா, போன்றோரின் வாழ்க்கை படங்கள், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதே போல், நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்தார் கீர்த்தி சுரேஷ். இந்த படம் இவருக்கு திரையுலகத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
அதே போல், நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கையை படமாக்கவும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்து, இந்தி பட தயாரிப்பாளர் போனிகபூரை மணந்து மும்பையில் குடியேறினார். ஜான்வி, குஷி, என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஸ்ரீதேவி அங்குள்ள குளியலறைத் தொட்டியில் மூழ்கி இறந்தார். அவரது வாழ்க்கையை படமாக்க போனிகபூர் தயாராகி வருகிறார்.
இந்நிலையில் ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார் தமன்னா. இதுகுறித்து அவர் கூறும்போது ஸ்ரீதேவி வாழ்க்கையை படமாக எடுத்தால் அவரது வேடத்தில் நடிக்க தயாராக இருக்கிறேன். ஸ்ரீதேவியாக நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. சிறு வயதிலிருந்தே எனக்கு ஸ்ரீதேவியைப் பிடிக்கும் என இப்போதே இந்த படத்தில் நடிக்க வலை வீசியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.