மஞ்சுவாரியர் நடன குடும்பத்தை சேர்ந்தவர் . மலையாள சினிமாவில் நடனத்துக்கு பெரிய வேலை இல்லை என்பதாலும் , எப்போதாவது வெளி மாநில படங்களில் நடிக்கும் போதும் (அசுரன் போல) , மேலும் ஆட்டம் போடுவது போன்ற கேரக்டர்கள் தனக்கு கிடைக்காததால் கடும் வருத்தத்தில் இருப்பவர் . ஆனால் இப்போது அவர் கதையின் நாயகியாக நடிக்கும் ‘ ஆயிஷா ’ படத்திற்கு ஒரு பாடலுக்கான நடனத்தை பிரபுதேவா வடிவமைக்கிறார் . ரிகர்ஷல் நேரங்களில் பிக் மாஸ்டருடன் எடுத்த படங்களை சோஷியல் மீடியாவில் பதிவேற்றி சிலிர்த்திருக்கிறார் மஞ்சு . (ஏங்க பிரபு, அப்படியே நயன் படத்துக்கும் டிஸைன் பண்றது)
விஜய் சேதுபதி – நயன் – விக்னேஷ் சிவன் – அனிருத் எனும் ஹிட் காம்போவின் அடுத்த சீசன் தான் ‘ காத்துவாக்குல ரெண்டு காதல் ’. இதன் ரிலீஸ் தள்ளித் தள்ளிப் போவதில் விக்கிக்கு செம்ம கவலையாம் . கடைசியாக ஏப்ரலுக்கு தள்ளி வைத்துள்ளனர் . என்னவானாலும் ஏப்ரலில் ரிலீஸ் செய்தே ஆகணும் எனும் வெறியில் இருக்கிறார் விக்கி . அவரது ஹார்ட் பீட்டை கூல் செய்து ‘ நிச்சயம் மறுபடியும் ஜெயிப்போம் . நோ டென்ஷன் டா ’ என்று கூல் பண்ணுகிறாராம் நயன் தாரா . (ஏங்க, நானும் ரவுடிதான் மூலமா லவ்வர்ஸ் ஆனீங்க, இந்த படம் மூலமா கண்ணாலம் கட்டிக்குவீங்களா?)
ஸ்டாண்ட் அப் காமெடியனாக , மிமிக்ரி கலைஞராகதான் மேடைகளையும் , சேனல்களையும் தொட்டவர் சிவகார்த்திகேயன் . யதேச்சையாக சினிமா மூலம் நுழைந்தவர் இன்று ‘ தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் இவர்தான் .’ என்று தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகனான ராம்சரணே புகழுமளவுக்கு பேர் வாங்கி விட்டார் . சிவகார்த்தி ஃபீல்டுக்குள் வந்து இது பத்தாவது ஆண்டு . (வந்தார், நின்றார், வென்றார்! ஆஸம்ல)
பிரபுவுக்கு பல ஹிட்களை கொடுத்தவர் பி . வாசு . இந்த கூட்டணி தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸை அதகளம் பண்ணிய காலங்கள் உண்டு . இவர்கள் இருவரின் வாரிசுகளும் சினிமாவில் இருந்தும் வெற்றி பெற முடியவில்லை . இந்நிலையில் பிரபுவின் மகன் விக்ரம்பிரபு ஹீரோவாக நடிக்கும் ‘ டைகர் ’ படத்தில் பி . வாசுவின் மகன் ஷக்தி வில்லனாகியுள்ளார் . (வில்லனை பார்த்து அடிங்க விக்ரம். பி.வாசு படங்கள்ள அவரு சின்ன வயசு பிரபுவா நடிச்சவரு)
டாக்டர் படம் மூலமாக சிவகார்த்திகேயன் - பிரியங்கா மோகன் ஜோடி ஹிட்டாகிவிட்டது . அதிலும் அந்த செல்லம்மா பாடல் இன்னும் யூ டியூபில் ரிப்பீட் மோடிலேயே உள்ளது . இந்நிலையில் இந்த ஜோடி ரிப்பீட்டாக இணைந்து நடிக்கும் ‘ டான் ’ படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகி வைரலாகியுள்ளது . அனிருத் வழக்கம்போல் ஆஸ்ம் பண்ணியுள்ளாராம் . ( இதுக்காக தனுஷ் ஒண்ணும் கோவிச்சுக்க மாட்டாப்லேயே?)
அவரு சின்ன வயசு பிரபுவா நடிச்சவரு)
Subscribe to get breaking news alertsSubscribe தமிழ் சினிமா (Tamil Cinema News) , டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows) , செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review) , நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.