’அங்கே மட்டும் கூப்பிடாதீங்க...’கதறும் நயன்தாரா... காதலனிடனிடமும் கறார்..!

Published : Oct 03, 2019, 06:04 PM IST
’அங்கே மட்டும் கூப்பிடாதீங்க...’கதறும் நயன்தாரா...  காதலனிடனிடமும் கறார்..!

சுருக்கம்

உங்கள் கொள்கையை போய் குப்பையில் போடுங்கள் என்று ரசிகர்கள் ஆத்திரப்படும் வரை அந்தக் கொள்கையை கட்டிக் கொண்டு நயன்தாரா அழுவார் போலிருக்கிறது.

அவர் நடிக்கும் படமாக இருந்தால் கூட அந்தப் படத்தின் துவக்க விழாவில் கலந்து கொள்ள மாட்டார். ரிலீஸ் நேரத்தில் புரமோஷனா?  திட்டவட்டமாக மறுத்துவிடுவார். அப்படிப்பட்டவர் தன் பணத்தை போட்டு ஒரு படம் எடுக்கிறார். வரவேண்டியதுதானே? தன் வருங்கால கணவர் விக்னேஷ்சிவன் தயாரிக்கும் ‘நெற்றிக்கண்’பட பூஜைக்கு நயன்தாரா ஆப்சென்ட். அப்படியானால் ஏதோ ஒரு செண்டிமெண்ட் இருக்கும் தானே.

இது குறித்து தனக்கு நெருக்கமானவர்களிடம் அந்த செண்டிமெண்டை பகிர்ந்து கொண்ட நயன்தாரா, “நான் எந்த பட பூஜைக்கு போனாலும் அந்தப்படம் ஓட மாட்டேங்குது. அதனால்தான் செல்வதில்லை ” என்று விளக்கமளித்து வருகிறாராம். இவ்வளவு பெரிய ஸ்டார் நடிகைக்கு இவ்வளவு சிறிய செண்டிமென்டா? 

இது ஒருபுறமிருக்க திருமணத்தை பற்றி அவரது காதலர்  விக்னேஷ் சிவன், "என்ன வேண்டுமானாலும் எழுதட்டும், எங்களுக்கு அதைப்பற்றி கவலையில்லை. அடுத்தடுத்து நிறைய வேலைகள் உள்ளன. இப்போதைக்கு திருமணம் இல்லை. திருமணம் பற்றி விளக்க முடியாது’’ எனக் கூறுகிறார்.  பருவத்தே பயிர்செய் என்கிற பழமொழி விக்னேஷ் சிவனுக்கு தெரியாதோ..?

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி