* நயன் தாராவும் சமீப காலமாக அதிக பக்தியாய் இருக்கிறார். சமந்தாவும் அப்படித்தான் இருக்கிறார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் விஜய் சேதுபதியுடன் இணைந்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடிக்கிறார்கள். சமந்தாவுக்கு பல கோயில்களை ரெக்கமெண்ட் செய்வதே நயன் தான்! என்று ஒரு தகவல் கிளம்பியுள்ளது.
* நயன் தாராவும் சமீப காலமாக அதிக பக்தியாய் இருக்கிறார். சமந்தாவும் அப்படித்தான் இருக்கிறார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் விஜய் சேதுபதியுடன் இணைந்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடிக்கிறார்கள். சமந்தாவுக்கு பல கோயில்களை ரெக்கமெண்ட் செய்வதே நயன் தான்! என்று ஒரு தகவல் கிளம்பியுள்ளது.
(சமந்து அப்படியே நீங்க ‘கல்யாண யோகம் தரும் கடவுளை’ நயனுக்கு ரெக்கமெண்ட் பண்ணுங்கோ!)
* சினிமா வாய்ப்பு இல்லையென்றால், மிக கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி சமூக வலைதளங்களில் போட்டுவிட்டு இயக்குநர்களை, ஹீரோக்களை தெறிக்கவிடுவது கோலிவுட் கிளிகளின் ஸ்டைல். பாலிவுட் கிளிகள் மட்டும் இதற்கு சளைத்தவர்களா? கியாரா அத்வானி, பிறந்த மேனிக்கு நின்று, ஒரு பெரிய இலையால் தனது முக்கால்வாசி நெஞ்சை மட்டும் மறைக்கும் அந்த போட்டோ இப்போது வைரலுக்கே ஃபீவர் உண்டாக்குமளவுக்கு பறந்துட்டு இருக்குது.
(பார்த்து இலை கிழிஞ்சுட போகுது கியாரா)
undefined
* தனுஷுடன் ‘கொடி’ பண்ணிய பிறகு கோலிவுட்டில் கெட்ட ரவுண்டு வருவோமுன்னு நினைப்பில் இருந்தார் அனுமா பரமேஸ்வரன். ஆனால் சொதப்பிடுச்சு. இப்ப பொண்ணு கையில இருக்கிற ஒரே நம்பிக்கை, அதர்வா ஜோடியாக தன் நடிக்கும் ’தள்ளிப்போகாதே’ படம்தான். அதுவும் ஊத்திக்கிக்க கூடாதேன்னு செம்ம பிரேயரில் இருக்கிறார்.
(பவுலர் பும்ராவுக்கு யாக்கரா வீசிட்டு இருந்தீங்களே மேடம்! என்னாச்சு பால்?)
* ஏ.எல்.விஜய் இயக்கிட, கங்கணா ரணவத் ஜெயலலிதாவாக நடிக்கும் ‘தலைவி’ படத்தில் சசிகலா கேரக்டரில் பிரியாமணியை ஒப்பந்தம் செய்திருந்தனர். ஆனால் அவரோ தெலுங்கு, இந்தியில் பிஸியாம். அதனால் இப்போது பூர்ணாவை நடிக்க வைக்கின்றனர்.
(அந்தம்மாஇல்லாட்ட இந்தம்மால்லாம் சின்னம்மா சசி ஆகிட முடியுமா?)
* மிகவும் ரிசர்வ்ட் டைப்பாக அறியப்பட்ட மிகப்பெரிய ஆளுமைதான் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். ஆனால் கடந்த இரண்டு மூன்று வருடங்களா அவர் ஜனரஞ்சகமாய் பழக துவங்கியிருக்கிறார். அடிக்கடி பேட்டி, விழாக்கள் என்று பட்டையை கிளப்பும் அவர், டெல்லிக்கு டிரம்ப் வந்தபோது நடந்த விருந்தில் பங்கேற்றார். அப்போது செல்ஃபி எடுத்துப் போட்டுள்ளார். அது செம்ம வைரலாகுது.
(ஆஸ்கார் நாயகனுக்குள்ளும் ஒரு ஆம் ஆத்மி இருக்கத்தானே செய்வான்!)