நயன்தாராவின் அடுத்த அவதாரம்... எப்படிப்பட்ட இன்ப அதிர்ச்சி தெரியுமா இது?...

Published : Dec 17, 2018, 11:12 AM ISTUpdated : Dec 17, 2018, 11:13 AM IST
நயன்தாராவின் அடுத்த அவதாரம்... எப்படிப்பட்ட இன்ப அதிர்ச்சி தெரியுமா இது?...

சுருக்கம்

 அஜித்துடன் நயன்தாரா நடித்த ‘விஸ்வாசம்’ படமும் ஜனவரி மாதம்தான் ரிலீசாக உள்ளது. இதைத் தொடர்ந்து, நயன்தாராவின் ‘ஐரா’ படத்தை பிப்ரவரியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.

தமிழ்சினிமாவின் நம்பர் ஒன் நம்பர் ஒன் நடிகையாக தொடர்ந்து கொடி பறக்கவிட்டுக்கொண்டிருக்கும் நயன்தாரா அடுத்த ஆண்டில் இயக்குநர் அவதாரம் எடுக்கவிருக்கிறார் என்று மிக நம்பகமான தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

கடந்த ஒன்றிரண்டு வருடங்களாக தொடர்ந்து பிசியாக இருந்துவரும் நயன் தற்போது ஹீரோயின் சப்ஜெக்டுகளில் அதிக கவனம் செலுத்திவருகிறார். அவரது சம்பளமும் 2 கோடிக்கும் மேல் உயர்ந்துவிட்டது.

‘உன்னைப்போல் ஒருவன்’, ‘பில்லா 2’ படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கத்தில், நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் திரைப்படம் ‘கொலையுதிர் காலம்’.இப்படத்தை யுவன் சங்கர் ராஜா, பாலிவுட்டின் பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான பூஜா எண்டர்டெயின்மென்ட்சுடன் இணைந்து தயாரிப்பதாக இருந்தது. சில காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது.

தற்போது, யுவன் சங்கர் ராஜாவின் நிறுவனத்துக்கு பதிலாக, எட்செட்ரா எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் இணைந்துள்ளது. இந்தப் படம் வரும் ஜனவரி மாதம் வெளியாக இருக்கிறது. அஜித்துடன் நயன்தாரா நடித்த ‘விஸ்வாசம்’ படமும் ஜனவரி மாதம்தான் ரிலீசாக உள்ளது. இதைத் தொடர்ந்து, நயன்தாராவின் ‘ஐரா’ படத்தை பிப்ரவரியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் தனது காதலர் விக்னேஷ் சிவன் உதவியுடன் படப்பிடிப்பு தவிர்த்த மற்ற நேரங்களில் கேமரா, எடிட்டிங் போன்ற தொழில் நுட்பங்களைக் கற்றுக்கொள்வதில் பெரும் ஆர்வம் காட்டிவருகிறார் நயன். எனவே அவர் இயக்குநராகும் வெகுதொலைவில் இல்லை என்கிறார்கள் நயனின் உதவியாளர்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி
டிரக் டிரைவராக இருந்த அவதார் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன்... பில்லியனர் இயக்குனர் ஆனது எப்படி?