24 மணிநேரத்தில் டபுள் ட்ரீட் கொடுக்கும் நயன்தாரா...

 
Published : May 16, 2017, 06:46 PM ISTUpdated : Sep 19, 2018, 12:37 AM IST
24 மணிநேரத்தில் டபுள் ட்ரீட் கொடுக்கும் நயன்தாரா...

சுருக்கம்

nayanthara movie information

லேடி சூப்பர் ஸ்டார்  தற்போது 'இமைக்கா நொடிகள்', 'கொலையுதிர்க்காலம்', 'வேலைக்காரன்' மற்றும் 'அறம்' ஆகிய நான்கு தமிழ்ப்படங்களிலும் நடித்து வருகிறார்.

அதர்வாவுடன் நயன்தாரா நடித்து வரும் திரைபடமான 'இமைக்கா நொடிகள்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகும் தேதி குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நாளை அதாவது மே 17ஆம் தேதி இரவு 7 மணிக்கும், இந்த படத்தின் டீசர் நாளை மறுநாள் அதாவது மே 18ஆம் தேதி இரவு 7 மணிக்கும் வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 24 மணி நேரத்தில் நயன்தாராவின் படம் ஒன்றின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டீசர் ஆகியவை அடுத்தடுத்து வெளிவரவுள்ளதால் அவரது ரசிகர்களுக்கு இது இரட்டை விருந்தாக இருக்கும் என கருதப்படுகிறது.

அதர்வா, நயன்தாரா, ராஷிகண்ணா, அனுராக் காஷ்யப், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை அஜய்ஞானமுத்து இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே அருள்நிதியின் 'டிமாண்டி காலனி' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கும் இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவும், புவன்ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார் - அவர் இத்தனை தமிழ் படங்களில் நடித்துள்ளாரா?
மாற்றப்படும் பராசக்தி ரிலீஸ் தேதி... ஜனநாயகனை காலி பண்ண என்னென்ன பண்றாங்க பாருங்க..!