
தமிழ் நடிகைகளின் சூப்பர் ஸ்டார் என வர்ணிக்கப்படும் நயன்தாராவின் காதல் வாழ்க்கையை மையமாக வைத்து படம் ஒன்று உருவாகி உள்ளது. நயன்தாரா தமிழ் ரசிகர்களின் ஆதர்ச நாயகியாக இருந்து வருகிறார் , தனது நடிப்பாலும் , அழகாலும் , கடின உழைப்பாலும் , தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளார் நயன்தாரா . எத்தனை நடிகைகள் வந்தாலும் அவர்கள் அனைவரையும் பின்னுக்குத்தள்ளி தனக்கான முதல் இடத்தை தொடர்ந்து தக்க வைத்து வருகிறார் அவர் . வயது ஏற ஏற அவரது அழகும் உடற்கட்டும் ரசிகர்களை கட்டிப் போட வைக்கிறது என்றே சொல்லலாம் . நயன் என்னதான் நடிகைகளின் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் அவரது காதல் வாழ்க்கை கசப்பான அனுபவங்களை கொண்டவையாகும் .
தற்போது அவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் . இந்நிலையில் அவர் காதலை மையமாக வைத்து மூன்று இஸ் ஏ ஐ கம்பெனி என்ற படநிறுவனம் படம் ஒன்று தயாரித்துள்ளது " நானும் சிங்கிள் தான்" என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் தினேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார் . தீப்தி திவேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார் . மொட்டை ராஜேந்திரன் , மனோபாலா , செல்வேந்திரன் , ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . டேவிட் ஆனந்த் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு நித்திஷ் மஞ்சுநாத் இசையமைத்து வருகிறார் . கோபி கதை திரைக்கதை வசனம் எழுதியுள்ளார் இப்படம் பற்றி கூறியுள்ள இயக்குனர் , சிங்கிள் என்ற வார்த்தை தற்போது மிகவும் கேச்சிங்காக உள்ளது. அதன் அடிப்படையிலேயே நானும் சிங்கிள் தான் என டைட்டிலுடன் களமிறங்கி இருக்கிறோம். டைட்டிலை போல கண்டன்டிலும் தனி கவனம் செலுத்தி இருக்கிறோம் . தமிழ்சினிமாவில் நடிகை நயன்தாராவின் காதல் மிகப்பிரபலம் , அந்த காதலை அடிப்படையாக வைத்து ஒரு கதையை தயார் செய்துள்ளோம்.
விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடி பலர் ஆசீர்வதிக்கும் ஜோடியாக இருந்தாலும் இப்போதுவரை சிலரால் ஆச்சரியமாக பார்க்கும் ஜோடியாகவும் உள்ளது . இந்த படத்தின் ஹீரோயின் இலட்சியமே நயன்தாரா போல் ஒரு பெண்ணை திருமணம் செய்யவேண்டும் என்பதுதான் , அஜித்தின் பில்லா படத்தில் நயன்தாரா டாட்டு குத்தி இருப்பதார் அதைப்போலவே டாட்டு குத்திய நபராக இப்படத்தின் ஹீரோ வருகிறார் . நயன்தாராவுக்கு டாட்டூ குத்திய ஹீரோ தன் ஹார்டை பறிகொடுக்க காதல் பேய் பிடித்த திரிவது தான் கதை . இதற்குள் நயன் விக்னேஷ் சிவன் காதல் சமாச்சாரங்களும் இருக்கும் என்றார் , இப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.