
லேடி சூப்பர் ஸ்டார், நடிகை நயன்தாராவின் கால் சீட் வேண்டும் என பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்கும் நிலையில், அசால்டாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இவரை இரண்டாம் இடத்திற்கு தள்ளி உள்ளார்.
நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான விஸ்வாசம் ஹிட் ஆனதை தொடர்ந்து அவர் ஹீரோயின் கதையம்சம் கொண்ட 'ஐரா' மற்றும் சிவகார்த்திகேயனுடன் 'மிஸ்டர் லோக்கல்' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் வெளியாக உள்ளது.
அதே போல் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் கதைக்கும், கதாப்பாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொண்ட படங்களாகவே தேர்வு செய்து நடிக்கிறார்.
அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான 'வடசென்னை' , 'கனா' ஆகிய படங்களில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையை பிரபல பத்திரிகை ஒன்று சென்ற வருடத்தின் டாப் நடிகைகள் பற்றிய பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் "Most Desirable Woman 2018” என்கிற லிஸ்டில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதலிடம் பிடித்துள்ளார். நயன்தாராவுக்கு இரண்டாவது இடம்தான் கிடைத்துள்ளது. நடிகை சமந்தா மூன்றாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.