காஷ்மீர் புல்வாமா தாக்குதல்! அரசு எந்த வகையில் பதிலடி கொடுத்தாலும் ஆதரவு! நடிகர் சங்கம் அறிக்கை!

By manimegalai aFirst Published Feb 17, 2019, 3:54 PM IST
Highlights

காஷ்மீர் புல்வாமாமில்,  ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு ஒன்று நடத்திய தற்கொலை படை தாக்குதலில்,  சி.ஆர்.பி.எப் வீரர்கள் 49  பேர் வீரமரணம் அடைந்தனர். 
 

காஷ்மீர் புல்வாமாமில்,  ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு ஒன்று நடத்திய தற்கொலை படை தாக்குதலில்,  சி.ஆர்.பி.எப் வீரர்கள் 49  பேர் வீரமரணம் அடைந்தனர். 

மரணம் அடைந்த வீரர்களுக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் இரங்கல் தெரிவித்ததோடு, பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்தும் வருகின்றன.

இந்த நிலையில் இந்த கொடூர தாக்குதலுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

காஷ்மீர் தீவிரவாதிகளின் தீவிரவாத தாக்குதலில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி. காஷ்மீரில் ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தீவிரவாத தாக்குதலுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறது.

இந்த தாக்குதலில் நம் தேசம் காக்க,  காவல் புரிந்து வந்த ராணுவ வீரர்கள் பலியாகியது நெஞ்சை உறைய வைத்துள்ளது.  வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு வீரத்தோடு கண்ணீர் அஞ்சலி செலுத்தி அவர்களது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். 

இந்த தாக்குதலுக்கு அரசு எந்த வகையில் பதில் அளித்தாலும் அதற்கு ஒட்டுமொத்த நாட்டின் நடிகர் சங்கமும்,  தென்னிந்திய நடிகர் சங்கமும் ஒற்றுமையுடன் ஆதரவு அளிக்கும் என்பதை தேசபக்தியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.  இவ்வாறு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

click me!