ஆனந்தக் கண்ணீர் விட்ட சிம்பு! இஸ்லாத்துக்கு மாறியது என் விருப்பம் என குறளரசன் விளக்கம்!

By Asianet Tamil  |  First Published Feb 17, 2019, 1:43 PM IST

“இஸ்லாத்தைத் தழுவியது என் தனிப்பட்ட விருப்பம். உங்கள் மத துவேஷங்களை என் மீது காட்டாதீர்கள்” என்று டி. ராஜேந்தரின் மகனும் சிலம்பரசனின் தம்பியுமான குறளரசன் காட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.


“இஸ்லாத்தைத் தழுவியது என் தனிப்பட்ட விருப்பம். உங்கள் மத துவேஷங்களை என் மீது காட்டாதீர்கள்” என்று டி. ராஜேந்தரின் மகனும் சிலம்பரசனின் தம்பியுமான குறளரசன் காட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

  இயக்குநரும் ல.தி.மு.க. கட்சி நிறுவனருமான டி. ராஜேந்தரின் மகனும் நடிகர் சிலம்பரசனின் தம்பியுமான டி.ஆர். குறளரசன் இஸ்லாம் மதத்தை நேற்று தழுவினார். தன் தந்தை டி.ராஜேந்தர், தாய் உஷா முன்னிலையில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். “எம்மதமும் சம்மதம் என்ற அடிப்படையில் என் மகனின் முடிவுக்கு மதிப்பளித்து இருக்கிறேன். சிம்பு சிவபக்தர். என் மகள் இலக்கிய கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுகிறார். இப்போது குறளரசன் இஸ்லாம் மதத்தைத் தழுவியிருக்கிறார்” என்று டி. ராஜேந்தர் விளக்கம் அளித்தார்.

Tap to resize

Latest Videos

undefined

குறளரசன் இஸ்லாம் சமயத்தை தழுவும் வீடியே வெளியானதும் அது சமூக ஊடகங்களில் வைரலானது. சில தரப்பினர் குறளரசனை விமர்சனம் செய்தனர். உடன் டி. ராஜேந்தரையும் சிலம்பரசனையும் விமர்சித்திருந்தார்கள். இந்நிலையில் நேற்று இரவு தனது முக நூல் பக்கத்தில் காட்டமாக குறளரசன் கருத்துகளைப் பதிவிட்டிருக்கிறார்.

“அன்பு நண்பர்களுக்கு, நான் இஸ்லாத்தை தழுவியது, என் தனிப்பட்ட விருப்பம். இஸ்லாமியக் கோட்பாடுகள் என்னை வெகுவாகக் கவர்ந்தது. அதனால், மதம் மாறியிருக்கிறேன். உங்கள், சொந்த மத துவேஷங்களை என் மீது காட்டாதீர்கள். அது, சற்றும் என்னை 'ம' எனக் கூட ஆக்காது. இதற்கும், என் அண்ணன், Silambarasan T Rajendran-க்கும் என் அப்பாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.” என்று குறளரசன் தெரிவித்திருக்கிறார்.

இந்தக் கருத்துக்கு முக நூல் பக்கத்தில் வந்த கமெண்ட்டுகளுக்கும் குறளரசன் பதில் அளித்துவருகிறார். ”இவ்ளோப் பேசறமே.. எவனாவது கமெண்ட்ட படிச்சாங்களா? வ....ளி எடப்பாடித்தான் இவங்களுக்கு” என்று குறளரசன் கட்டமாக கூறியிருக்கிறார். “உங்கள் அண்ணன் சிம்பு மனமுடைந்து கண்ணீர் ரீயாக்ட் செய்துள்ளார்” என்று ஒருவர் கேட்ட கேள்விக்கு, “அது ஆனந்த கண்ணீர் நண்பா” என்றும் குறளரசன் தெரிவித்திருக்கிறார்.

click me!