அடுத்த தலைமுறை விழிப்புணர்வில் இறங்கிய நயன்தாரா.......!!!

Asianet News Tamil  
Published : Oct 09, 2016, 07:25 AM ISTUpdated : Sep 19, 2018, 01:55 AM IST
அடுத்த தலைமுறை விழிப்புணர்வில் இறங்கிய நயன்தாரா.......!!!

சுருக்கம்

 தமிழ் சினிமாவின் அதிகம் சம்பளம் வாங்கும் முன்னை நடிகை என்றால்  அது கண்டிப்பாக நயன்தாராதான். படங்களில் நடித்து வந்தாலும், கண்ணனுக்கு தெரியாமல் சில விழிப்புணர்வுகளிலும் இவர் பங்கு வகிக்கிறார்.

இவர் தற்போது  டோரா, இமைக்கா நொடிகள்,மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஒரு   படம் என வரிசைக்கட்டி நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் இராமநாதபுரத்தில் உள்ள கீழக்கரை பங்களாவில் 2 வாரம் தங்கியுள்ளார், என்ன என்று விசாரிக்கையில் படப்பிடிப்பிற்காக அங்கு வந்துள்ளார்.

இவர் தற்போது குடிநீர் தட்டுப்பாடு குறித்து ஒரு விழிப்புணர்வு படத்தில் நடித்து வருகிறார், அதற்காக படக்குழு இராமநாதபுரத்தில் முகாமிட்டுள்ளது தெரியவந்தது.

பல முன்னணி நடிகர்களுடன் நடித்துவந்தாலும் அடுத்த தலைமுறையினரின் வாழ்விற்காக தற்போது தண்ணீர் குறித்து இந்த விழிப்புணர்வு படத்தில் நடித்துள்ளாராம் இதற்காக கண்டிப்பாக நயன்னை பாராட்டியே ஆகவேண்டும் .

இப்பகுதியில் படபிடிப்புகள் நிறைவு பெற்று நயன்தாரா கீழக்கரையிலிருந்து புறப்பட்டு செல்லும் போது அந்த பகுதி மக்களிடம் குடிநீர் வசதி எப்படி இருக்கிறது? என்று கேட்டு அறிந்து சென்றுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

இளையராஜாவின் இசை உரிமையில் புதிய சட்டச் சிக்கல்! 134 ஹிட் படங்களுக்கு விழுந்த பூட்டு!
முடிவுக்கு வந்த நீண்ட நாள் ரகசியம்... விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமண தேதி லீக்!