கல்யாணத்துக்கு முன்பே குழந்தையை உறுதி செய்த நயன்தாரா... விக்னேஷ் சிவனின் விடாப்பிடி காதல்..!

Published : May 11, 2020, 12:56 PM IST
கல்யாணத்துக்கு முன்பே குழந்தையை உறுதி செய்த நயன்தாரா... விக்னேஷ் சிவனின் விடாப்பிடி காதல்..!

சுருக்கம்

நயன்தாராவின் செயல்பாடுகள் எப்போதுமே புதிர்தான்... காதலில் மட்டுமல்ல கல்யாணத்திலும் அப்படியே... அதோ, இதோ என பல ஆண்டுகளாக ரசிகர்களை திருமண விஷயத்தில் குழப்பி வந்தார். அட ரசிகர்களை மட்டுமா? அவரது காதலர்களையும்தான்.

நயன்தாராவின் செயல்பாடுகள் எப்போதுமே புதிர்தான்... காதலில் மட்டுமல்ல கல்யாணத்திலும் அப்படியே... அதோ, இதோ என பல ஆண்டுகளாக ரசிகர்களை திருமண விஷயத்தில் குழப்பி வந்தார். அட ரசிகர்களை மட்டுமா? அவரது காதலர்களையும்தான்.

கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்த ‘நானும் ரவுடிதான்’என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை நயன்தாராவுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது மூன்றாவது காதல் மலர்ந்தது. இந்த காதல் கடந்த ஐந்து வருடங்களாக வேரூன்றிய நிலையில் விரைவில் இருவரும் திருமணம் செய்ய இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தந்தியடிக்கின்றன. ஆனால் பந்தி எப்போது என்று தான் தெரியவில்லை. 

இந்த நிலையில் நேற்று அன்னையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில் உலகம் முழுவதும் உள்ள அன்னையர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்தன. இதனையடுத்து இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் நயன்தாராவின் புகைப்படம் ஒன்றை பதிவு செய்து அவருக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.

அந்த புகைப்படத்தில் நயன்தாரா ஒரு சிறு குழந்தையை கையில் வைத்துள்ளார். இந்த புகைப்படம் குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன், எனது வருங்கால குழந்தையின் அன்னையான நயன்தாராவுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள்’என்று குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து விக்னேஷ் சிவன்-நயன்தாரா காதல் 100% சதவீதம் உறுதி செய்யப்பட்டதாகவும் விரைவில் இருவருக்கும் திருமணம் உறுதி என்றும் கூறப்படுகிறது. அனேகமாக அடுத்த அன்னையர் தினத்தில் நயன்தாரா தனது குழந்தையுடன் அன்னையர் தினத்தை கொண்டாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!