நயன்தாராவா பரிதவிக்கும் விநியோகஸ்தர்கள்! விஜய் எடுத்த அதிரடி முடிவு!

By manimegalai aFirst Published Apr 14, 2019, 5:51 PM IST
Highlights

நயன்தாரா நடிப்பில் வெளியான, படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் லாபத்தை ஈட்டி கொடுத்தது.
 

நயன்தாரா நடிப்பில் வெளியான, படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் லாபத்தை ஈட்டி கொடுத்தது.

ஆனால், சமீபத்தில் நயன்தாரா நடித்து வெளிவந்த, 'ஐரா' படம் அதற்கு நேர்மாறாக தோல்வியடைந்து,  நஷ்டத்தை ஏற்படுத்தியது.

இந்த படத்திற்கான மொத்த செலவு ரூபாய் 11 கோடி என்றும், படம் ரூபாய் 15 கோடிக்கு வியாபாரம் ஆனது. அந்த வகையில் தயாரிப்பாளருக்கு ரூபாய் 4 கோடி லாபம் கிடைத்தது. படம் சரியாக ஓடாததால் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் அனைவரும் அதிக நஷ்டம் அடைந்து பரிதவித்து நிற்கிறார்கள்.

ரூபாய் 10 கோடிக்கு படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு,  நான்கு கோடி மட்டுமே பங்குத் தொகையாக கிடைத்தது 6 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விஜயின் அதிரடி முடிவு:

நடிகர் விஜய், தன்னை வைத்து படம் தயாரிக்கும் பட அதிபர்களும் தன் படங்களை வாங்கி திரையிடும் விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்கள், எந்த வகையிலும் நஷ்டம் அடையக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்.

விஜயுடன் இணைந்து இயக்குனர் இயக்கிய, 'தெறி', 'மெர்சல்' ஆகிய இரண்டு படங்கள் சேர்ந்து பணி புரிந்தார்கள் இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணிபுரிகிறார்கள்.  படத்திற்கு ஆகும் செலவு பற்றி கவலைப்படுவதில்லை கடந்த இரண்டு படங்களிலும் அவர் அதிக செலவை இழுத்து விட்டார் என்கிற குற்றச்சாட்டு இருந்தது. இதனால் விஜய் உஷாராகி விட்டார் படத்தின் தயாரிப்புச் செலவுகள் அதிகமாகி விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்கிற அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

click me!