லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 'ஐரா' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

By manimegalai aFirst Published Feb 18, 2019, 8:03 PM IST
Highlights

தல அஜித்துடன் நயன்தாரா நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் பொங்கல் ரிலீசாக வெளியாகி, அஜித் ரசிகர்களுக்கு இந்த வருட பொங்கலையே 'தல' பொங்கலாக மாற்றியது. 
 

தல அஜித்துடன் நயன்தாரா நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் பொங்கல் ரிலீசாக வெளியாகி, அஜித் ரசிகர்களுக்கு இந்த வருட பொங்கலையே 'தல' பொங்கலாக மாற்றியது. 

இந்த படத்தில் நடிகை நயன்தாராவின் கதாப்பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அதிக படியாக பேசப்பட்டது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நயன்தாரா கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் 'ஐரா' படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.

நயன்தாரா இரண்டு வேடங்களில் நடித்துள்ள, 'ஐரா' திரைப்படம் வரும்  மார்ச் மாதம் 28ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த படத்தில் கருப்பு நயன்தாராவிற்கு கணவராக கலையரசன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்பட பலர் நடித்துள்ளனர். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையில் சுதர்சன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பில், கார்த்திக் ஜோகேஷ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சர்ஜூன் இயக்கியுள்ளார்.

இந்த படத்தை தொடர்ந்து, மே 1 ஆம் தேதி, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள 'Mr . லோக்கல்' திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

click me!