
CRPF வீரரின் வீட்டுக்கு சென்ற ஒரே நடிகர்...! எங்கப்பா ரஜினி ? அஜித் ? கமல்?
கடந்த 14ம் தேதி புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 44 இராணுவ வீரர்கள் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இதற்கு நாடே கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்ற நிலையில், கிரிக்கெட் வீரர் வீரர்கள் மற்றும் ஒருசில பிரபலங்கள் உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என சமுக வளைத்தளத்தில் பதிவிட்டும், ஒருசிலர் நிதியுதவி அளிக்கவும் முன்வந்துள்ளனர். அந்தவகையில் நடிகர் ரோபோ ஷங்கர் உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் வழங்க உள்ளதாக அறிவித்து இருந்தார். சொன்னதை சொன்னபடியே இன்று, உயிரிழந்த ராணுவ வீரரின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறி ரூபாய் ஒரு லட்சத்தை வழங்கினார் ரோபோ ஷங்கர்.
இதுவரை மற்ற நடிகர் நடிகைகள் யாரும் உதவ முன் வராமல் அமைதிகாக்கும் இந்த தருணத்தில் நடிகர் ரோபோ ஷங்கர் முதல் நடிகராய் முன்வந்து வீரர் குடும்பத்திற்கு உதவி செய்துள்ள சம்பவம் அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது. மேலும் இந்த தகவலை அறிந்த சமூகவலைத்தள வாசிகள் ரோபோ ஷங்கருக்கு பாராட்டுகளைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர். அதேவேளையில்,எங்கப்பா ரஜினி ? அஜித் ? கமல்? என்ற விமர்சனமும் எழ தொடங்கி உள்ளது.
எதற்கெடுத்தாலும் ஒரு அறிவிப்பை வெளியிட்டும், இரங்கலை தெரிவித்தும், முதல் ஆளாய் வர கூடியவர்கள் எல்லாம் இப்ப எங்கே சென்றார்கள் என்ற சிந்தனையில் மூழ்கி உள்ளனர் மக்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.