நயன்தாராவின் 'ஐரா' குறித்து வெளியான முக்கிய தகவல்!

By manimegalai a  |  First Published Feb 14, 2019, 7:32 PM IST

கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, கோலமாவு கோகிலா படத்திற்கு பின் மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் 'ஐரா' .
 


கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, கோலமாவு கோகிலா படத்திற்கு பின் மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் 'ஐரா' .

இந்த படத்தின் டீசர் மற்றும் ஒரு பாடல் வெளியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் கருப்பாக நடித்திருக்கும் நயன்தாராவால் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்புகள் எகிறியுள்ளது.

Tap to resize

Latest Videos

இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில்,  இந்த படம் நேற்று சென்சாருக்கு சென்றுள்ளது. சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்து படத்திற்கு 'யூஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். 

இதனையடுத்து இந்த படம் வரும் மார்ச் மாதம் வெளியாகவிருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். சரியான ரிலீஸ் தேதி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

இரண்டு வித்தியாசமான வேடங்களில் நயன்தாரா நடித்துள்ள இந்த படத்தில் கலையரசன், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்பட பலர் நடித்துள்ளனர். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையில் சுதர்சன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பில், கார்த்திக் ஜோகேஷ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சர்ஜூன் இயக்கியுள்ளார்.

click me!