நயன்தாராவுக்கு வாணி போஜன் மேலே இன்னா பயம்..? வயசு தெரிஞ்சுடுமோ..!

Published : Jan 25, 2022, 11:05 AM IST
நயன்தாராவுக்கு வாணி போஜன் மேலே இன்னா பயம்..? வயசு தெரிஞ்சுடுமோ..!

சுருக்கம்

தன் தங்கையாக வாணி நடிப்பதற்கு ஸ்ட்ரிக்டாக நோ சொல்லிட்டாராம் நயன்..

  • ஆர்.ஜே.பாலாஜி சொந்த வாழ்வில் மிகவும் கஷ்டப்பட்டு வளர்ந்தவர். குறிப்பாக தன் அப்பா தன் குடும்பத்தை பொறுப்பாக கவனித்துக் கொள்வதில்லை எனும் கோபம் அவரிடம் உண்டாம். இதைத்தான் தன் படங்களின் மூலம் தீர்த்துக் கொள்கிறார். குறிப்பாக மூக்குத்தி அம்மனில் வந்த அவரது குடும்பம் அச்சு அசல் அவரது ஒரிஜினல் குடும்பத்தின் ஜெராக்ஸ்தானாம். இப்படத்தை பார்த்துட்டு பாலாஜியின் நெருங்கிய உறவுகள், ஏன் இப்படி குடும்ப மானத்த வாங்குற? என்றார்களாம். அதற்கு ‘இதை ஏன் எங்கப்பாட்ட கேட்கல?’ என்று திருப்பிக் கேட்டாராம்.

(விடுங்க பாஸு, வெடவெடன்னு இருக்றவங்கள பார்த்தா இப்படித்தான் வெண்ணையாட்டமா பேசுவானுங்க)

 

  • சந்தானம் பெரிதாய் எதிர்பார்த்த சபாபதி படம் ஊற்றிக் கொண்ட நிலையில், தனது செண்டிமெண்ட் ஹிட் படமான ‘தில்லுக்கு துட்டு’ வை மீண்டும் கையிலெடுக்கிறார்.  ஏற்கனவே இதன் இரண்டு பாகங்கள் வெளி வந்துவிட்ட நிலையில் இதன் மூன்றாம் பாகத்தை தயாரிக்கும் முடிவிலிருக்கிறார். வழக்கம்போல் புது கதாநாயகிகள் இல்லாமல் இந்த முறை சற்று முன் ஃபீல்டை விட்டு ஒதுங்கிய மெகா ஹீரோயின்களை இழுத்து போடும் முயற்சியிலிருக்கிறாராம். அந்த வகையில் ஹன்ஸிகாவிடம் பேசிப்பார்க்க, கடுமையாக ரியாக்‌ஷன் வந்ததாம் ஹன்ஸியிடமிருந்து.

(அட சந்தானம் ஹீரோவான விஷயம்  ஹன்ஸிக்கு தெரியல போல!)

  • சின்னத்திரை நயன்தாரா! என்று வாணிபோஜனிடம் வழிவோர் ஏராளம். சமீபத்தில் நயன் தாரா கதையின் நாயகியாக நடிக்கும் படமொன்றில் அடிப்படை பணிகள் தயாராகின. அதில் நயனின் தங்கையாக வாணிபோஜனை நடிக்க வைக்கலாம்! என்று இயக்குநர் முடிவு செய்திருக்கிறார். கதையின் டெவலப்மெண்டை கேட்ட நயன், தன் தங்கையாக வாணி நடிப்பதற்கு ஸ்ட்ரிக்டாக நோ சொல்லிவிட்டாராம். டைரக்ட்டர் கொஞ்சம் தில்லான மனுஷன். ‘ஏன் மேடம் மறுக்குறீங்க. உங்க தங்கைன்னு சொன்னா கரெக்டா பொருந்துவாங்க’ என்று மீண்டும் அதை வலியுறுத்த, ‘அப்ப அவங்களை வெச்சே இந்த படத்தை எடுத்துக்குங்க.’ என்று காண்டாகிவிட்டாராம்.

காரணத்தை விசாரித்தால்… வாணியும் தானும் ஒரே சீனில் ஒன்றாக நடிக்கும் காட்சிகளில் தான் மிகவும் முதிர்ச்சியாய் தெரிந்துவிடுவோம்! என யோசிக்கிறாராம் நயன். அதன் விளைவே இந்த மறுப்பாம்.

(கத்திரிக்காய் முத்துனா மார்க்கெட் பக்கம் வந்துதானே ஆவணும்)

 

  • ஆதிபுருஷ்! எனும் டைட்டிலில் ராமாயணத்தை ஆஸம் திரைக்கதையோடு பான் இந்தியா படமாக  தயார் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த சூழலில், தமிழகத்திலும் பொன்னியின் செல்வன் மெகா ப்ராஜெக்ட் பட்டை தீட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், சிவாஜி கணேசனின் மைல் ஸ்டோன் படமான ‘கர்ணன்’ படத்தை  ரீமேக் பண்ண மெகா தயாரிப்பாளர் ஒருவர் முடிவு செய்திருப்பதாகவும், அதற்கான அடிப்படை பணிகள் துவங்கிவிட்டதாகவும் தகவல்கள் தடதடக்கின்றன. கர்ணன் கதாபாத்திரத்தில் விக்ரம் அல்லது அர்விந்த்சாமியை நடிக்க வைக்கும் முடிவில் இருக்கிறார்களாம்.

(உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது….)

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!