தடகள வீராங்கனையாக நடிக்கும் நயன்தாரா...!!!

 
Published : Apr 10, 2017, 07:37 PM ISTUpdated : Sep 19, 2018, 03:08 AM IST
தடகள வீராங்கனையாக நடிக்கும் நயன்தாரா...!!!

சுருக்கம்

nayanthaara act with sports person character

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனக்கு கிடைத்த பட்டத்திற்கு ஏற்ப நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் மட்டும் நடித்து வருகிறார். கடந்த சில வருடங்களாக அவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதேபோல் நயன்தாரா கலெக்டர் வேடத்தில் நடித்த 'அறம்' திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து விரைவில் வெளியாக உள்ளது. மேலும் அவர் 'இமைக்கா நொடிகள்', 'கொலையுதிர்க்காலம் ஆகிய நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் சிவகார்த்திகேயனுடன் 'வேலைக்காரன்' என்ற படத்திலும் நடித்து வருகிறார்

இந்த நிலையில் நயன்தாரா இதுவரை ஏற்று நடிக்காத தடகள வீராங்கனை கேரக்டரில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தை பெரியசாமி என்பவர் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த படத்தில் தன்னுடைய கேரக்டர் ரியலாக இருக்கவேண்டும் என்பதற்காக அவர் தடகள பயிற்சியாளர் ஒருவரிடம் பயிற்சி எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

2017ஆம் ஆண்டில் நயன்தாரா நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளியாகவிருப்பதால் இந்த ஆண்டு அவருக்கு மறக்க முடியாத ஆண்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஒன்னில்ல ரெண்டில்ல அடுத்தடுத்து 5 புது சீரியல்களை களமிறக்கும் சன் டிவி - அதன் முழு லிஸ்ட் இதோ
விஜயகாந்த் மகன் ஹீரோவாக பாஸ் ஆனாரா? ஃபெயில் ஆனாரா? கொம்புசீவி விமர்சனம் இதோ