
அவருடன் ஜோடி போடும் நடிகை யார்? பட்ஜெட் எவ்வளவு? கதை என்ன? என்கிற தகவல்களை எதிர்பார்த்து காத்துக்கிடக்கிறது கோடம்பாக்கம் ஏரியா. 30 கோடி பட்ஜெட் என ஆரம்பத்தில் கூறப்பட்டாலும் இப்போது ரஜினி பட பட்ஜெட்டை எல்லாம் தாண்டி விட்டது. விளம்பர பட இயக்குனர்களான ஜேடி-ஜெர்ரி இரட்டையர்களின் இயக்கத்தில் உருவாகப் போகும் இப்படத்தின் பட்ஜெட் சுமார் 100 கோடி ரூபாய் என்கிறார்கள். 2020 ல்தான் ரிலீஸ் என்கிற இலக்கை நோக்கி அடி எடுத்து வைத்திருக்கும் இப்படக்குழு கிராபிக்ஸ் தொழில் நுட்பத்திற்காக மட்டும் சுமார் ஐம்பது கோடியை அள்ளி இறைக்கப் போகிறதாம். மேக் -அப் போட ஹாலிவுட் கலைஞர்கள் வரவழைக்கப்பட உள்ளார்கள்.
இந்தப்படத்தின் உயரம் தெரியாமல் ஓடிப் பதுங்கிய நயன்தாரா, தமன்னா, ஹன்சிகா உள்ளிட்ட நாயகிகள் அருளோடு ஜோடி போடுவதா? என ஓட்டமெடுத்த நடிகைகள் இப்போது அண்ணாச்சியின் அருள் கிடைக்குமா என உள்ளூர ஏங்குவதாக சொல்லப்படுகிறது. பட்ஜெட்டையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் கேள்விப்பட்ட நடிகை நயன்தாரா, அவசரப்பட்டு விட்டோமோ என இப்போது நகத்தை கடித்து வருவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.
நிலைமை அப்படி இருக்க, பலரும் அண்ணாச்சியின் படத்தில் பணியாற்ற கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதில் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில், ‘’உயர்திரு சரவணா ஸ்டோர் அய்யா அவர்களுக்கு விடியலைத் தேடும் ஒரு கிராமத்தானின் குரல் இந்த ஏழை கவிஞனுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் ஐயா. அருமையான பாடல்கள் எழுதித் தருவோம். இளைய சமுதாயத்தின் மத்தியில் பரவக்கூடிய பாடலாக எழுதி தருவோம். கவிஞர்கள் பலருண்டு. ஏழைக் கவிஞனுக்கு ஒருவாய்ப்பு.
உயர்திரு சரவணா ஸ்டோர் ஐயா உங்கள் திரைப்படம் பல வெற்றிகளை குவிக்கும். உங்கள் படத்துக்கு ஒரு பாடல் எழுத வாய்ப்பு கொடுங்கள் ஐயா. யாம் ஒரு கிராமத்து கவிஞன். நிறைய பாடல்கள் சங்கங்களுக்கும் மற்ற விஷயங்களுக்கும் எழுதி கொடுத்துள்ளேன். இந்த கவிஞனுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் ஐயா’’ எனக் கேட்டுள்ளார். அண்ணாச்சியின் அருள் இவருக்கு கிட்டுமா?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.