’கார் பார்க்கிங்கில் கதறி அழுத தேசிய விருது நடிகர்’...’ஹே ராம்’குறித்து கமல் சொல்லும் சீக்ரெட்...

By Muthurama LingamFirst Published Nov 8, 2019, 5:54 PM IST
Highlights

தமிழில் ரஜினியின் ‘பேட்ட’படத்தின் முக்கிய வில்லனாக நடித்த நவாசுதின் சித்திக் இன்றைக்கு தேசிய விருதுபெற்ற நடிகராக இந்தியா முழுக்க பிரபலம். ஆனால் இதே நவாசுதின் சித்தின் ஒரு காலத்தில் கமலிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிவர் என்று சொன்னால் கேட்க வியப்பாக இருக்கும். ’ஆளவந்தான்’ இந்திப் பதிப்பின்போது கமலுக்கு வசன உதவியாளராகப் பணியாற்றிய நவாசுதின் தொடர்ந்து கமலுடன் பயணிக்க ஆரம்பித்தார். அதன் தொடர்ச்சியாக கமலிடம் ‘ஹே ராம்’படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.

கமலின் பிறந்தநாள் நிகழ்வுகளின் ஒரு அம்சமாக இன்று மாலை சத்யம் திரையரங்கில் அவர் இயக்கி நடித்த ‘ஹே ராம்’படத்தின் சிறப்புத் திரையிடம் நடந்துவரும் நிலையில், அப்பட வெளியீட்டு நாளன்று பின்னாளில்  தேசிய விருதுபெற்ற ஒரு நடிகர் கதறி அழுத சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார்.

தமிழில் ரஜினியின் ‘பேட்ட’படத்தின் முக்கிய வில்லனாக நடித்த நவாசுதின் சித்திக் இன்றைக்கு தேசிய விருதுபெற்ற நடிகராக இந்தியா முழுக்க பிரபலம். ஆனால் இதே நவாசுதின் சித்தின் ஒரு காலத்தில் கமலிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிவர் என்று சொன்னால் கேட்க வியப்பாக இருக்கும். ’ஆளவந்தான்’ இந்திப் பதிப்பின்போது கமலுக்கு வசன உதவியாளராகப் பணியாற்றிய நவாசுதின் தொடர்ந்து கமலுடன் பயணிக்க ஆரம்பித்தார். அதன் தொடர்ச்சியாக கமலிடம் ‘ஹே ராம்’படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.

அப்படத்தில்  ஷாருக் கான், ராணி முகர்ஜி, வசுந்தரா தாஸ், அதுல் குல்கர்னி, கிரிஷ் கர்னாட்,  சுக்லா மற்றும் ஹேமா மாலினி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இருந்ததால் நவாசுதின் அவர்களுக்கும் கமலுக்கும் பாலமாகச் செயல்பட்டார். நவாசுதினின் திறமையைக் கண்டு வியந்த கமல் அவரை ஒரு முக்கிய காட்சியில் நடிக்கவும் வைத்தார். ஆனால் படத்தின் நீளம் கருதி எடிட்டிங் டேபிளில் அந்தக் காட்சியின் ஆயுள் முடிந்துபோனது. அது தெரியாமல் படத்தின் பிரிமியர் ஷோ தினத்தன்று டிப் டாப் உடை அணிந்து வந்த நவாசுதின் படம் முடிந்து வெளியே வந்ததும் தன் காட்சி இல்லாதது கண்டு கார் பார்க்கிங்கில் கதறி அழுதுகொண்டிருந்ததைப் பார்த்து ஆறுதல் சொல்லியிருக்கிறார்.  

click me!