நட்புன்னா என்னன்னு தெரியுமா’ இந்த வாரமாவது வருமா?

Published : Oct 11, 2018, 11:58 AM IST
நட்புன்னா என்னன்னு தெரியுமா’ இந்த வாரமாவது வருமா?

சுருக்கம்

மூன்று நண்பர்கள் ஒரே பெண்ணைக் காதலிக்கும் ‘இன்று போய் நாளைவா’ டைப் கதையான ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா?’ ஒரு வழியாய் தியேட்டர்களை நெருங்கிக்கொடிருக்கிறது. ஆனால் திட்டமிட்டபடி இந்த வாரம் ரிலீஸாகும் வாய்ப்பு இருக்கிறதா என்பது மீண்டும் சந்தேகத்திற்கிடமாகியிருக்கிறது.

மூன்று நண்பர்கள் ஒரே பெண்ணைக் காதலிக்கும் ‘இன்று போய் நாளைவா’ டைப் கதையான ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா?’ ஒரு வழியாய் தியேட்டர்களை நெருங்கிக்கொடிருக்கிறது. ஆனால் திட்டமிட்டபடி இந்த வாரம் ரிலீஸாகும் வாய்ப்பு இருக்கிறதா என்பது மீண்டும் சந்தேகத்திற்கிடமாகியிருக்கிறது.

 

போஸ்டர்கள் அடித்து, செய்தித்தாள்களில் விளம்பரம் தந்து கடைசிநேரத்தில்  குறைவான எண்ணிக்கையிலாவது தியேட்டர்கள் கிடைக்காமல் பின்வாங்க வேண்டிய துயரமான நிலை சிறுபட்ஜெட் படங்களுக்கு சமீபகாலமாக அதிகரித்துவருகிறது. 

இந்த லிஸ்டின் லேட்டஸ்ட் பலிகடா லிப்ரா புரடக்சன்ஸ் தயாரித்திருக்கும் ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா?’ சிவகுமார் அர்விந்த் இயக்கத்தில் புதுமுகம் கவின், கேரள தேவதை ரம்யா நம்பீசன் நடித்திருக்கும் இப்படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டு, கடந்த ஆண்டே ஆடியோ ரிலீஸ் பண்ணப்பட்ட படமாகும்.

 

இப்படத்துடன் நாளை ரிலீஸாவதாக இருக்கும் ‘ஆண் தேவதை’’மனுஷங்கடா’ ஆகிய படங்களும் தேவையான தியேட்டர்கள் கிடைக்காமல் திண்டாடிவருகின்றன. ரிலீஸ் குறித்து முகநூலில் கண்ணீர் வடித்துவரும் இப்பட தயாரிப்பாளர் ரவீந்திரன் ‘சென்னையில் காம்ப்ளக்ஸ் தியேட்டர்களில் ஒரு காட்சி தருவதற்கே என்னைப்பாடாய்ப் படுத்துகிறார்கள். அதுவும் கூட்டமே வராத காலைக்காட்சிதான் தருகிறார்கள். இந்தவாரமும் படம் ரிலீஸாவது சந்தேகமே’ என்று பதிவிட்டிருக்கிறார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Peddi OTT Release: 'பெத்தி' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எந்த தளத்தில் வெளியாகிறது தெரியுமா?
Jananayagan Censor: விஜய்யின் 'ஜனநாயகன்' படத்துக்கு 'A' சர்டிஃபிகேட்டா? பரவும் வதந்தியின் உண்மை என்ன?