அப்பா, அம்மாவை அப்புறம் பாத்துக்கலாம்...நயன்தாராவுக்காக அவசர அவசரமாகக் கொந்தளித்த நடிகர் நாசர்...

Published : Mar 25, 2019, 03:22 PM IST
அப்பா, அம்மாவை அப்புறம் பாத்துக்கலாம்...நயன்தாராவுக்காக அவசர அவசரமாகக் கொந்தளித்த நடிகர் நாசர்...

சுருக்கம்

தனக்குத் தேவையானதை மட்டுமே கவனத்தில் வைத்துக்கொள்ளும் ’செலக்டிவ் அம்னீஷியா’ என்னும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் நடிகர் சங்கத் தலைவரான நாசர். இது தொடர்பாக மிக விரைவில் தீவிர சிகிச்சைப் பிரிவு ஒன்றில் வைத்து அவர் சிகிச்சை அளிக்கப்படுவார் என்று தெரிகிறது.

தனக்குத் தேவையானதை மட்டுமே கவனத்தில் வைத்துக்கொள்ளும் ’செலக்டிவ் அம்னீஷியா’ என்னும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் நடிகர் சங்கத் தலைவரான நாசர். இது தொடர்பாக மிக விரைவில் தீவிர சிகிச்சைப் பிரிவு ஒன்றில் வைத்து அவர் சிகிச்சை அளிக்கப்படுவார் என்று தெரிகிறது.

மேட்டர் இதுதான். கடந்த இரு தினங்களுக்கு முன்பு நாசரின் உடன்பிறந்த சகோதரர் ஜவஹர், ‘’சமூகத்தின் மேல் அதிக அக்கறை கொண்டவர் போல் நடிக்கும் நாசர், வறுமையில் வாடும் அவரது தாய், தந்தையை கடந்த 25 வருடங்களாக எட்டிக்கூட பார்ப்பதில்லை’ என்று துவங்கி ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் கூறியிருந்தார். அது குறித்து ஜவஹர் அனுப்பியிருந்த இரண்டு நிமிட காணொளியும், செய்தியும் வெளியாகாத ஊடகங்களே இல்லை. அது குறித்து இதுவரை வாயே திறக்காத நாசர், இன்று நயன்தாராவுக்கு ஒரு பிரச்சினை என்றவுடன் கொதிப்புடன் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

இதோ அந்த அறிக்கை....

பெறுநர் :
         திரு.ராதாரவி அவர்கள்,
   எண்.9 1வது தெரு, போயஸ் ரோடு,
   தேனாம்பேட்டை,
   சென்னை – 600018.
     
அன்புடையீர் வணக்கம் ..!
 
சமீபத்தில் நடந்த  “கொலையுதிர் காலம்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பெண்களை கொச்சைப்படுத்துவது போல் நீங்கள் பேசிய  “இரட்டை அர்த்த வசனங்களை  கேட்டு உண்மையிலேயே மனது மிகவும் வருந்துகிறது ..! இதை தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது..!
 
இந்த மேடையில் மட்டும் அல்ல, பல காலங்களாக தங்களுடைய  இணையதள நேர்காணலிலும், பொது மேடைகளிலும், திரைப்பட விழாக்களிலும் இதுபோல் இரட்டை அர்த்த வசனங்களையும், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறீர்கள்..! இது ஊடகங்களின் மூலம் உலகெங்கும் பரவி இருக்கிறது ..! 
   
இது ஒட்டுமொத்த திரைத்துறைக்கும்,  மற்ற நடிகர்களுக்கும், அதில் பங்காற்றக்கூடிய பெண்களுக்கும், ஒரு அவமானமான சூழ்நிலையையும், மனஉளைச்சலையும் தருகிறது என்பதை ஏன் தாங்கள் உணரவில்லை..?திரைத்துறையில் தங்களது தந்தையாருக்குப் பிறகு தொடர்ச்சியாக ஐம்பது வருடங்கள் நீண்ட அனுபவத்தை கொண்டிருக்கக்கூடிய தாங்கள் தங்களுடைய அனுபவங்களை நல்வழியில் பயன்படுத்தினால் அது வருகின்ற தலைமுறைக்கு வழிகாட்டுதலாக இருக்கும்..!
 
ஆனால் இதுபோன்ற கொச்சையான, கீழ்த்தரமான பேச்சுக்கள் உங்களுடைய மேன்மையை உயர்த்தாது மட்டுமல்லாமல், திரைத்துறையின் மேல் மக்களுக்கு இருக்கக்கூடிய நம்பிக்கையும் சீரழிக்கும் என்பதை ஏன் உணரவில்லை ..? எது எப்படி இருப்பினும், இனிவரும் காலங்களில் நீங்கள் இதை உணர்ந்து, இதுபோன்ற வக்கிரமான பேச்சைத் தவிர்த்து செயல்படுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம் ..!
 
அதை தவிர்த்து, இது போன்ற செயல்களில் நீங்கள் தொடர்ந்து செயல்படுவீர்கள் என்றால் “தென்னிந்திய நடிகர் சங்கம் “ திரைத்துறையில் தங்களுக்கு தொழில் ஒத்துழைப்பு தருவது பற்றி, தீவிரமாக முடிவு செய்ய வேண்டி இருக்கும் என்பதை முன்னரே தங்களுக்கு இக்கடிதத்தின் மூலமாகத் தெரிவித்துக்கொள்கிறோம்.
 
 நன்றி !
(M.நாசர்)

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Dushara Vijayan : ஜில் பனியில் கூலாகும் துஷாரா விஜயன்... இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் பிக்ஸ்!
Malavika Mohanan : பார்த்தாலே கிக்!! இறக்கமான சுடிதாரில் மாளவிகா மோகனின் நச் போஸ்..